உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

குண்டுக்கழுதை, குண்டாந்தடியன் முதலிய தொடர்களில், குண்டு என்னுஞ் சொல் திரட்சியைக் குறித்தல் காண்க.

குண்டு - குண்டி.

குள் குட்டி கட்டி கேழ்வரகுக் களிக் கிண்டும்போது படும் மாக்கட்டியைக் குட்டி என்பர். குட்டிபடுதல் என்பது வழக்கு.

கும் கொம் கொம்மை = திரட்சி.

கொம் - கொம்பு கம்பு கம்பம்.

=

குவ குவவு திரட்சி. குவடு = திரண்ட சிகரம், மலை. குவடு கோடு

குள் கொள் - கொட்டை = திரண்டது.

குல் - கோல் = திரட்சி, திரண்ட கம்பு.

"

“கோல்தொடி” = திரண்ட வளையல்.

கோல் - கால் = கம்பு, பந்தலைத் தாங்கும் கம்பு, தூண், தூண் போன்ற உறுப்பு, அவ் வுறுப்பின் அளவு (1/4). இப்பொருள் வரிசையைத் தலைகீழாகக் கூறுவர் உரையாசிரியன்மார்.

கால்போல் நீண்டு செல்லும் பொருள்களெல்லாம் கால் எனப்படும். கால் = நீர்க்கால், காற்று, காலம்.

கால் = காற்று. கால் = காலம்.

சுள் - சுளை = திரட்சி, திரண்ட பழச்சதைப் பகுதி.

சுளையா- நூறு உருபா வாங்கிக்கொண்டான் என்னும் வழக்கைக்

காண்க.

சுள் - செள் - செண்டு = மழு. சௌ - செரு சேர்.

"சேரே திரட்சி'

(தொல். உரி.635)

சுள் (சொள்) - சோடு = திரட்சி. இத்தச் சோடு என்னும் வழக்கைக்

காண்க.

சோடு சோட்டா = திரண்ட தடி.

துள் - (தூள்) - தூண் - தூணம்.

துள் - தள் - தண்டு - தண்டம். தண்டு - தண்டி, தடி. தண்டித்தல் தடித்தல், பருத்தல்.

=