உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

ii. திரண்ட அடி

53

மரஞ்செடிகொடிகளின் அடி, அவற்றின் மற்றப் பகுதிகளை விடப் பருத்திருப்பதால், பருமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பல சொற்கள் அடியைக் குறிக்கத் தோன்றியுள்ளன.

உள் அள் அண்டு. அண்டுதல் பொருந்துதல் (கூடுதல்), திரளுதல், பருத்தல்.

அண்டு

அண்டி

ஒ.நோ: தண்டு - தண்டி தடி.

=

அடி மரத்தின்

=

நெருங்குதல், முட்டுதல்,

அடி

=

பருத்தது, பருத்த அடி.

அடிப்பகுதி, மூலம், ஆதி, பழைமை;

மரத்தடிபோன்ற பாதம், கால், செ-யுளடி, அடியளவு (foot); ஒன்றன் அடிப்பாகம்.

அண்டு

அண்டி = உடம்பின் அடித்துளை (anus). அண்டி தள்ளுதல் = அடித்துளைப் பகுதி வெளி வருதல் (Prolapsus ani).

அண்டி தள்ளுதலை அண்டு தள்ளுதல் என்றுங் கூறுவர்.

அண்டிமா = பழத்தின் அடியிற் கொட்டையுள்ள மரமுந்திரி.

அண்டிமாம்பழம்

அண்டிமாங்கொட்டை

என்பன தென்னாட்டு வழக்கு.

அண்டிக்கொட்டை

அண்டுதல் என்னுஞ் சொற்கு மேற்குறித்த பொருள்களுள்ளமை கீழ்வருந் தொடர்களாலும் மேற்கோளாலும் அறியப்படும்.

(1) கிட்டுதல், நெருங்குதல். (இது வெளிப்படை).

(2) முட்டுதல். அண்டை கொடுத்தல் = முட்டுக்கொடுத்தல்.

அண்டு - அண்டை - அடை.

பட்டடை = தட்டும் அணைகல், அடைகல்.

(3) பொருந்துதல், ஒத்தல், தகுதல், ஏற்றல்.

"6

'ஆகார மாமுவமைக் கண்டாது

(ஞானவா. முமுட்சு, 27)

அண்டிப் பிழைத்தல் = ஒருவனைப் பற்றுக்கோடாகக் கொள்ளுதல்.

அண்டைவைத்துத் தைத்தல் = ஒட்டுப்போட்டுத் தைத்தல்.