உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

55

மூலம் என்னுஞ் சொல் முதலாவது மரவடியையே குறித்திருத்தல்

வேண்டும்.

"போதி மூலம் பொருந்தி'

(LOGflGLD. 26:47)

மூல - மூலி = மருந்திற்குரிய வேர்ச் செடிகொடி. மூலி - மூலிகை.

iii. திரண்டொலித்தல்

உலம் - உலம்பு. உலம்புதல் = பேரொலி செ-தல்.

குமுகுமெனல் = பேரொலி செ-தல்.

"குமுகுமெனவே முழக்க'

(திருப்போ.சந்.பிள்ளைத். சிறுபறை. 2)

கும் - குமுறு. கும் - குமுதம் = பேரொலி.

"கதறிமிகு குமுதமிடு பரசமயம்'

துள் - தள் - தழ தழங்கு. தழங்குதல் = முழங்குதல்.

முள் - (மள்) - மண் = மண் = முழக்கு.

"மண்முழா மறப்ப"

முள் முழ முழங்கு முழக்கு முழக்கம்.

குறிப்பு: தழுவியவை.

iv. பூப்படைதல்

இங்குக்

(திருப்பு.948)

(புறம். 65)

குறிக்கப்பட்ட சொற்கள் ஒலிக்குறிப்புத்

நிலைத்திணையில், திரண்ட அல்லது பருத்த முதலும் சினையும் முதிர்ச்சியடையும். அதனால், திரட்சிபற்றிய சொற்கள் சில பூப் படைதலை உணர்த்தும்.

உருத்தல் = முதிர்தல்.

கும் குமரி

=

திரண்டவள், கன்னி, கன்னிமை, இளமை, அழி

வின்மை (என்று மிளமை).

மூப்பு சாக்காட்டிற் கேதுவாதலால், இளமை அழியாமையைக் குறித்தது.

கும்மல் = கூடுதல், குவிதல், திரளுதல், கும் கொம் கொம்மை = திரட்சி.