உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

முரு - முரி -மூரி = வளைவு. முரிதல் = வளைதல். முள் - முறு - முறை - மிறை = வளைவு.

குல் - (மல்) - வல் வல. வலத்தல் = வளைதல்.

iii. வணங்குதல்

71

மக்கள் கடவுளையும், தாழ்ந்தோர் உயர்ந்தோரையும் வணங்கும் போது உடம்பு வளைதலால், வளைதற் கருத்தில் வணக்கக் கருத்துப் பிறந்தது.

-

உறு இறு இற இற - இறை இறைஞ்சு. இறைஞ்சுதல் = வளைதல், வணங்குதல்.

குடம்

குடந்தம் வளைவு, வணக்கம். குடந்தம் படுதல்

வளைதல், வணங்குதல், தொழுதல்.

=

குள்

(முள்) வள் (வண்) - வணங்கு

-

வணக்கு வணக்கம்.

வணங்குதல் = வளைதல், தொழுதல்.

iv. திரும்புதல்

ஒரு பொருள் வளையும்போது அது தான் முன்பு புறப்பட்ட இடத்தை அல்லது திசையை நோக்குதலால், வளைதற் கருத்தில் திரும்பற் கருத்துப் பிறந்தது.

துள் - (துரு) - திரு திரும் திரும்பு.

திரு - திரி. திரிதல் = திரும்புதல்.

முள் - முறு - முறி - மறி. மறிதல் - திரும்புதல்.

-

முள் - முடு - முடங்கு மடங்கு. மடங்குதல் = திரும்புதல்.

மடங்கு மடங்கல் = இடையிடை திரும்பிப் பார்க்கும், அதாவது முன்னும் பின்னும் நோக்கிச் செல்லும் அரிமா, அதுபோன்ற கூற்றுவன். V. மீள்தல்

மீள்தலாவது திரும்பி வருதல்.

துள் - (துரு) - திரு திரும் திரும்பு.

திரு - திரி. திரிதல் = திரும்புதல்.

ஒன்றைச் செப்பினை திரிதி யென்றான்

(கம்பரா. அங்கத. 10)