உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

முள்

(மூள்)

மீள்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

=

மீட்சி. மீள்தல் திரும்புதல். மீட்டல்

=

திருப்புதல், அடைவு வைத்த பொருளைத் திருப்புதல்.

மூள் - மூட்டு - மீட்டு. மீட்டுதல் = திருப்புதல், அடைவு வைத்த பொருளைத் திருப்புதல். மூட்டுதல் என்பதே உலக வழக்கு.

மீள்தல்

=

பகைவர் கையினின்று அல்லது துன்பத்தினின்று திரும்புதல். மீட்டல் = பகைவர் கையினின்று அல்லது துன்பத்தினின்று விலக்கிக் காத்தல்.

மீள் - மீட்பு - மீட்பன்.

நிரைமீட்சி என்பது நிரை திரும்பி வருதலையும் மீட்கப்படு தலையும் குறித்தல் காண்க.

vi. மடங்குதல்

இலையும் தாளும் துணியும் போன்ற பொருள்களின் ஓரமும், கைகால் முதலியவற்றின் முனையும், திரும்புதலே மடங்குதலாம்.

சுள் - சுர் - சுரி. சுரிதல் = மடிதல், மடிப்பு விழுதல்.

முள் - முடு - முடங்கு மடங்கு.

முடு முடி மடி. மடிதல் = மடங்குதல்.

மடித்தல் = தாள் துணி முதலியவற்றை மடக்குதல்.

=

மடி மடிக்கப்பட்ட சேலை, அரையிற் கட்டின ஆடையின் மேல்விளிம்பைப் பைபோல் மடித்த பகுதி.

மடங்கு மடக்கு = அலகை மடக்கிவைக்குங் கத்தி.

மடக்குதல் = மடித்தல்.

vii. திரைதல்

திரைதலாவது மடிப்பு விழுதல் அல்லது மடிப்பு விழுந்து

சுருங்குதல்.

சுள் - சுர் - சுரி. சுரிதல் = மடிப்பு விழுதல், திரைதல்.

சுரித்தல் = திரைதல், சுருங்குதல்.

சுரித்த மூஞ்சி = மூப்பினால் திரைந்த முகம்.

=

சுரிதகம் கலிப்பாவின் பிறவுறுப்புகளிற் கூறப்பட்ட பொருளைச் சுருக்கி அல்லது தன்னுள் அடக்கிக் கூறும் முடிவுறுப்பு. சுரிதகம், தரவு, தாழிசை முதலியவற்றிற் கூறப்படும் பொருளை அடக்கிக் கூறுவதனா லேயே, அடக்கியல் எனப்பட்டதென்றறிக.