உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

சுள் - சுரு சுருங்கு சுருக்கு சுருக்கம்.

-

73

குடையை மடக்குதலைக் குடையைச் சுருக்குதல் என்றும், திரை விழுதலைச் சுருக்குவிழுதல் என்றும் கூறுதல் காண்க.

துள் - (துரு) - திரை. திரைதல் = மடிப்பு விழுதல், அலையெழு தல், சுருங்குதல், திரளுதல்.

திரைத்தல் = மடித்துச் சுருக்குதல், மடித்துத் திரட்டுதல்.

=

திரை – திரையல் = சுருங்குகை, வெற்றிலைச் சுருள்.

திரை

திரங்கு. திரங்குதல்

=

திரைந்து சுருங்குதல், வற்றிச்

சுருங்குதல், சுருளுதல்.

திரங்கு - திரக்கு. திரக்குதல் = சுருங்குதல்.

viii. திருப்புதல்

திருப்புதலாவது பக்கந் திருப்பிப் புரட்டுதல்.

திரும்பு - திருப்பு - திருப்பி.

தோசை திருப்பி - தோசையைப் புரட்டுங் கருவி.

புரள்தல் = திரும்புதல். புரண்டுபடுத்தல் = திரும்பிப் படுத்தல்.

புரள் - புரட்டு. புரட்டுதல் = ஒன்றைத் திருப்புதல்.

புரட்டு - புரட்டி. தோசை புரட்டி = தோசை திருப்பி.

புரட்டு - புரட்டல் = புரட்டிச் சமைக்குங் கறி.

ix. மடக்குதல்

மடக்குதலாவது ஒன்றைத் திருப்பி அதன் செலவைத் தடுத்தலும் அதை அமர்த்துதலும்.

முள் - முறு - முறி - மறி. மறித்தல் = மடக்குதல், அமர்த்துதல்.

கிடைமறித்தல் = கிடையமர்த்துதல்.

மறி மறியல் = தடுத்தல்.

முள் - முடு - முடங்கு மடங்கு மடக்கு.

மடக்குதல் = திருப்புதல், தடுத்தல், அமர்த்தல், வெல்லுதல்.

மடங்குதல் = தோற்றல், அடங்குதல்.

கிடை மடக்குதல் = கிடையமர்த்துதல்.

முடங்கு முடக்கு. முடக்குதல் = தடுத்தல்.

x. முடங்கிக் கிடத்தல்