உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

குல் -குலு குலுங்கு - குலுக்கு. குலுங்குதல் = அசைதல்.

81

(சுல்) சல் - சலி. சலித்தல் = அசைதல், அசைத்தல், அசைத்துத் தெள்ளுதல். சலியடை = சல்லடை.

-

-

துள் துள துளங்கு துளக்கு - துளக்கம்.

துளங்குதல் = அசைதல்.

துள்(து) துயல். துயலுதல் = வளைதல், அசைதல்.

நுள் - நுண் - நுணங்கு. நுணங்குதல் = வளைதல், அசைதல். நுள் - நுட நுடங்கு. நுடங்குதல் = வளைதல், அசைதல்.

ii. இயங்குதல்

ஒரு பொருள் அசைவதினால் அது சற்று இடம் பெயர்கின்றது. ஓரிடத்தினின்று இன்னோரிடத்திற்குப் பெயர்தலும் அசைவின் பாற்படும். ஆங்கிலத்திலும் move என்னுஞ் சொல், அசைதலையும் இடம்பெயர்தலையுங் குறித்தல் காண்க.

உல் - உல - உலவு - உலாவு. உலாவுதல் = இயங்குதல்.

-

உல் ஒல் ஒல்கு. ஒல்குதல் = நடத்தல்.

ஒல்கு = ஒழுகு ஒழுக்கு ஒழுக்கம் = நடத்தை.

ஒழுகுதல் = நடத்தல், முக்கரணத்தால் நடத்தல்.

உல் - அல் - அலை - அசை. அசைதல் = நடத்தல், மெல்ல நடத்தல்.

உள்

(உ-) - உய

இய இயங்கு இயக்குஇயக்கம் = செலவு.

இயங்குதல் = செல்லுதல்.

உய

உய

உயவு. உயவு நெ- = வண்டி செல்லுதற்கு வேண்டும் மசகு.

உயல் - இயல். இயலுதல் = நடத்தல், நிகழ்தல், நிகழ முடிதல்,

செல்லுதல்.

இய - இயவுள் = செலுத்துவோன், கடவுள்.

இயல் = நடத்தை, தன்மை.

இயல் - இயல்பு = தன்மை.

இயல் - இயற்கை = தன்மை, தன்மையாக அல்லது தானாக நடப்பது.

சுல் - செல் செலவு.