உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

iii. வருந்துதல்

அசைவினாலும்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

செலவினாலும் உடம்பிற்குத் தளர்ச்சியும்

வருத்தமும் பிறக்கும், அதனால், அசைவும் செலவும் குறித்த சொற்கள் தளர்ச்சியும் வருத்தமுங் குறிக்கும். உள்ளத்தின் அசைவு துன்பம், உடலின் அசைவு வருத்தம்.

உல் - அல் - அல்லல் = துன்பம்.

அல் - அல்லா. அல்லாத்தல் = துன்புறுதல்.

அலசுதல் = அசைதல், வருந்துதல். அலசடி = துன்பம்.

அலைதல் = அசைதல், வருந்துதல். அலைத்தல் = வருத்துதல்.

ஆறலைத்தல் = வழிப்போக்கரை வருத்திப் பறித்தல்.

அலைச்சல் = திரிதல், வருத்தம்.

அலை - அசை

அசைவு = தளர்ச்சி, வருத்தம், துன்பம்.

சுல் - சல் -சலி - சலிப்பு. சலித்தல் = தளர்தல், வருந்துதல்.

சில் - செல் - செல்லல் = துன்பம்.

"செல்லல் இன்னல் இன்னா மையே

துளங்குதல் = அசைதல், வருந்துதல்.

29

(தொல். உரி.6)

முறிதல்

(3) முறிதல் துறை

முறிதலாவது, விறப்பான நீள்பொருள்கள் ஒன்றை முட்டிச் சாயுமிடத்து அல்லது வளையும்போது ஒடிதல். இவ் வியற்கை விதி யறிந்தே, வரிச்சையும் கரும்பையும் ஒடிக்கவேண்டியவிடத்து முழங் காலை முட்டவைத்துச் சா-ப்பர்.

உடு - ஒடு ஒடி. ஒடு = வளைவு, நெளிவு. ஒடு - ஒடுக்கு, உலோகக் கலங்களின் நெளிவை ஒடு அல்லது ஒடுக்கு என்பர். அதை நீக்குதற்கு ஒடுத்தட்டுதல் அல்லது ஒடுக்கெடுத்தல் என்று பெயர்.

ஒடிதல் = முறிதல். ஒடி ஒசி.

உறு இறு. இறுதல் = வளைதல், முறிதல்.

நுள் - நொள் - நொடி. நொடித்தல் = வளைதல், ஒடிதல்.

நுள் - நெள் - நெரு - நெரி - நெரிசல் = நெருங்கி முட்டுதல், உடைதல்.