உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

ஒப்பியன் மொழிநூல் ஆண்டு : என்று (சூரியன்) - (ஏன்று) - (ஏண்டு) - யாண்டு...

ஆண்டு.

ஆண்டென்னுங் கால அளவு சூரியனா லுண்டானது. இங்ஙனமே பிற காலப் பெயர்களும் ஒவ்வொரு காரணம்பற்றிய வையாகும்.

இடப்பெயர்

இடு + அம் = இடம். பொருள்களை இடுவதற்கிடமானது இடம். ஒ.நோ: E. position, from L. pono, to place.

தலம் என்னும் பெயர் ஸ்தலம் என்பதின் திரிபாகக் கருதப் படுகிறது. ஸ்தலம் என்பதற்கு ஸ்தா (நில்) என்பது வேர். இது ஆரிய மொழிகள் எல்லாவற்றிலு மிருக்கின்றது. state, station, stand, steady, es- tablish முதலிய சொற்கட்கெல்லாம் sta என்பதே வேர். ஆனால், இதனால்மட்டும் அதை ஆரியத்திற்கேயுரிய சொல் லாய்க் கொள்ள முடியாது.தா (கொடு) என்னுஞ் சொல்லை நினைத்துக்கொள்க.

காலுக்குத் தாள் என்று ஒரு தனித்தமிழ்ச்சொல் உளது. அதற்குத் தா என்பதுதான் வேரா யிருக்கவேண்டும். தாவு என்னுஞ் சொல், டப்பொருளில் தென்னாட்டில், சிறப்பாய்க் கல்லா மக்களிடை வழங்குகின்றது. தாள் என்னுஞ் சொற் போன்றே, தா என்னுஞ் சொல்லும் முயற்சியென்னும் பொருளில் நூல்வழக்கில்

வழங்குகின்றது.

"தாவே வலியும் வருத்தமும் ஆகும்

(2 fl. 48)

என்றார் தொல்காப்பியர், வலி = வன்மை. வருத்தம் வன்மை. வருத்தம் = முயற்சி. தாளம், தாளி (கள்ளி), தாண்டு, தாவு, தாழ், தங்கு, தக்கு, தாங்கு, தளம், தளர் முதலிய பல சொற்கள் தா என்னும் வேரினின்று பிறந்தவையே. ஆகையால், குமரிநாட்டில், தா என்னும் வேர்ச் சொல் நில் என்னும் பொருளில் தமிழில் வழங்கியிருக்கவேண்டும். தளம் தலம். ஆராயப்படாமையாலும் வேர் வழக்கற்றதினாலுமே இச் சொல் வடசொல்லாகத் தோன்றுகின்றது. தலம் - ஸ்தலம் (முன்மெய்ச்சேர்பு.)