உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

ஒப்பியன் மொழிநூல்

துணைவினைகள் பலவகைப் பெயர்களோடும் வினை முற்று எச்சங்களோடும் சேர்ந்துவரும். அவற்றுள் சினைப் பெயரோடு சேர்ந்து வருபவை மிகப்பல.

கா : கைபார், கைக்கொள், கையாடு, கையாள், கைதேர், கைவா, கையறு, கைப்பற்று முதலியன.

துணைவினைகளுள் முடி, கூடு, மாட்டு முதலியவை, உடன்பாட்டில் ஆற்றல் (potential) பொருளும் எதிர்மறையில் விலக்கு (prohibition) மறுப்பு (Denial)ப் பொருள்களும் உணர்த்தும்; விடு இடு என்பவை துணிவு விரைவு வியப்பு முடிவு முதலிய பொருள்களுணர்த்தும்; இடு அருள் முதலியவை வேண்டுகோள் வாஞ்சை அருளல் ஆகிய பொருள்களுணர்த்தும்; கொள் என்பது தற்பொருட்டு (Reflexive)ப் பொருளும் மாற்றிக்கோடல் (Reciprocal) பொருளுமுணர்த்தும்; ஆர் (ஆர), தீர் (தீர) முதலியவை முன் னொட்டாய்ச் சேரின் மிகுதி (Intensive)ப் பொருளுணர்த்தும்.

இரட்டைக்கிளவி வினை (Frequentative Verb)

கா : துறுதுறு, குளுகுளு, சலசல.

பெயரடிவினை (Denominative Verb)

கா : எள் - எள்ளு, புரம் - புர.

புரத்தல் காத்தல். புரம் = கோட்டை, நகர்.

ஆகுபொருள்வினை

ஒரு வினை தன்பொருளொடு தொடர்புள்ள இன்னொரு பொருளில் வழங்கின், அதை ஆகுபொருள் வினையெனலாம்.

கா : (காசு) செல்லும், (இவ்வளவு) போதும், (உள்ளம்) குளிரும்.

இடைச்சொல்

இடை ஒன்றன் இடம். இடு(கு)தல் சிறுத்தல். உடம்பில் இடுகிய பாகம் இடை. இடைபோல ஒன்றன்பாகமான இடம் இடை. ஒ.நோ: கண், கால், தலை, வாய். இடம் என்பது உண்மையான இடத்தையும் இடை என்பது 7ஆம் வேற்றுமை இடத்தையுங் குறிக்கும்.