உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

151

பெரும்பாலும் பெயரிடத்தும் வினையிடத்தும் வருஞ் சொல்

இடைச்சொல்.

இ டைச்சொற்கள், பொருள் இடம் பயம்பாடு குன்றிய பொருண்மை என்பனபற்றி, நால்வகையாக வகுக்கப்படும்.

என்பனபற்றி,நால்வகையாக

(1) பொருள்கள் குறிப்பு, வினா, ஐயம், உயர்வு, இழிவு, எச்சம், விளி, வியப்பு, காலம், இடம், பிரிநிலை, தேற்றம், முற்று, எண், பயனின்மை, பிறிது முதலியன.

(2) இடம் பற்றியவை முன்னொட்டும் பின்னொட்டும்.

(3) பயம்பாடு பற்றியவை வேற்றுமையுருபு, உவமவுருபு, பெயரீறு, வினையீறு, சாரியை, இணக்கச்சொல், இணைப்புச் சொல், வரிசைக்குறி என்பன.

இடைச்சொல் பெரும்பாலும் பயம்பாட்டைப் பொறுத்தது. கா : போன்றான்(வி.), போல(இ.); என்றான்(வி), என்று (இ.).

(4) குன்றியபொருள சிவசிவா (சூசுவா), பார்த்தாயா, பார் முதலியன

i.

ii.

iii.

iv.

இணக்கச்சொல் ஆம், சரி, நல்லது, ஆகட்டும் முதலியன. இணைப்புச்சொல் நால்வகைய. அவையாவன :

கூட்டிணைப்புச்சொல் (Cumulative Conjuction)

கா : ஏ, உம், என, அதோடு, அன்றியும், மேலும், இனி. விலக்கிணைப்புச்சொல் (Alternative Conjuction)

கா : ஆயின், ஆனால், ஆனாலும், என்றாலும், இருந்தாலும். மாறிணைப்புச்சொல் (Adversative Conjuction)

கா : ஆவது, ஆதல், ஆயினும், அல்லது, எனினும் - ஏனும்.

முடி பிணைப்புச்சொல் (Illative Conjuction)

கா : அதனால், ஆதலால், ஆகையால், ஆகவே, எனவே, வரிசைக்குறிகள் ஆம், ஆவது என்பன.