பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

109



மறுமையில் தமக்கும் பயன்படுமாறு நடந்துகொள்ளாதவர், இவ் வுலகில் இருப்பதினும் தாம் நுகர்வனவற்றைப் பிறர்க்குப் பயன்படும்படி நுகர விட்டுவிட்டு இறப்பதே மேல் என்பது கருத்து.

573. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண்.

(இ-ரை.) பாடற்கு இயைபு இன்றேல் பண் என் ஆம் - பாடுதற்குப் பொருத்தமில்லை யெனின் பண்ணால் என்ன பயனாம்? கண்ணோட்டம் இல்லாதகண் கண் என் ஆம் - அதுபோலக் கண்ணோட்டமில்லாத விடத்துக் கண்ணால் என்ன பயனாம்?

கண்பார்வையின் சிறந்த பயன் கண்ணோட்டமே என்பது கருத்து. பண் என்பது இசைவகை. அது பாலையாழ் முதலிய நாற்பெரும் பண்ணின் வகையான நூற்றுமூன்று பண்களின் விரியாக "நரப்படைவா லுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதி யிசைகள்" (சிலப். அரங். 45, அருஞ்சொல்லுரை). அவை ஏழும் ஆறும் ஐந்தும் நான்கும் ஆக முரல் (சுரம்) உடைமைபற்றி, பண் (சம்பூரணம்), பண் ணியல் (ஷாடவம்), திறம் (ஔடவம்), திறத்திறம் (சுராந்தியம்) என நால்வகைப் பாகுபாடுடையன. பாடற்றொழில்கள்:

“சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா முச்சிமலை நீர்விழுக்கா டொண்பருந்து - பச்சைநிற வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழற்பறவை யேயுங்கா லோசை யியம்பு."

"உள்ளாளம் விந்துவுட னாத மொலியுருட்டுத் தள்ளாத தூக்கெடுத்தல் தான்படுத்தல் - மெள்ளக் கருதி நலிதல்கம் பித்தல் குடிலம் ஒருபதின்மே லொன்றென் றுரை.” (இசைமரபு)

“கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்திருவ ருள்ளாளப் பாட லுரை" (இசைமாபு)

என்பவற்றால் அறியப்படும்.