பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

113



இங்ஙனம் இக் குறட்கு இருவகையாய் உரைப்பதற்குக் கரணியம். ஒறுத்தல் என்னும் சொல் தண்டித்தல் என்றும் வருத்துதல் என்றும் இரு பொருள் தருவதே.

580. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.

(இ-ரை.) நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.

'நயத்தக்க நாகரிகம்' என்றதனாலும், 'அமைவர்' என்றதனாலும், நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால், இப் பொருட்பாலில் அரசர்க் குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ் வதிகாரத்தின் இவ் விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும், அறிந்துகொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும், நட்புப்பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும், அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க’ என்னும் அடைபெற்ற தென்றும் அறியப்படும். அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர்செய லாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல்.

நாகரிகம் என்றது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை. கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிக மெனப்பட்டது.

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சு முண்பர் நனிநா கரிகர்" (நற்.355)

என்பது பெய்தும் என்னாது 'கண்டும்' என்றதனால், உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.

அதி. 59 - ஒற்றாடல் அதாவது, அரசன் தன் நாட்டிலும் தன் நாட்டைச் சூழ்ந்த பிற நாடுகளிலும் தனக்கு நட்பாகவோ பகையாகவோ வுள்ள சேய்மை நாடுகளிலும், பகை, நட்பு, நொதுமல் என்னும் முத்திறத்தாரிடத்தும் நிகழ்பவற்றை மறை