பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

திருக்குறள்

தமிழ் மரபுரை



பிறரெனக் குணங்கொல்லாது ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையுந் திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையு மூன்றும் உடையை யாகி"

(புறம்.55)

என்பதனால், அரசவறத்தின் தன்மை அறியப்படும். பரிமேலழகர் கூறிய ஓதல், படைக்கலம் பயிறல் என்பவை அரசன் கடமைகளே யன்றி அறமாகா. அவற்றை அறமெனக் கொள்வது ஆரிய முறையாம். மேலும் வேட்டல் என்பது தமிழருக்குரிய தொழிலன்று. முதுகுடுமிப் பெருவழுதியும் பெருநற்கிள்ளியும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் தம் பேதைமையால் ஏமாற்றப்பட்டே ஆரிய வேள்விகளை வேட்டனர் என அறிக. வேட்டலுக்குப் பகரமாக வேட்டஞ் செய்தலைக் கொள்க.

"மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ”

(பெரிப்பு. 4 : 36)

என்பதனால், அரசன் அறனிழுக்காது அல்லவை நீக்குதல் அறியப்படும். மறனிழுக்கா மானமாவது. "அழிகுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக் கழிதறு கண்மை”யும் (பு. வெ. 55),

"ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான் மாறன்மையின் மறம்வாடுமென் றிளையரையு மெறியான் ஆறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன்" (சீவக. மண்மகள். 160)

என்பதும்,

“தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை யெறித லிளிவரவால் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்துவார் வேன்” (பெருந்.720)

என்பதுமாம். அரசனது தன்மை அரசின்மேல் சார்த்திக் கூறப்பட்டது சார்ச்சி வழக்கு.

385.இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு.