பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சீர் - பெருமையாகிய ஆற்றல் 499 சீர்த்த இடத்து - செல்லுங்காலம் வாய்த்த விடத்து 490 சுற்றப்படும் - சூழப்படும் 525 சூழாது – எண்ணாது 465 சூழ்ந்துவிடும் - துணியும் 451 செயற்பால - செய்ய வேண்டியவற்றை 437 செய்கிற்பான் - செய்து முடிக்க வல்லான் 515 செய்தக்க - செய்யத்தக்கன 466 செலச்சொல்லி - விளங்குமாறு சொல்லி 424 செறுநர் - பகைவர் 488 சோர்வுபடும் - கெடும் 405 தக்காங்கு - நடுவாக நின்று 561 தங்கிற்று - நிலைபெற்றது 613 தண்பதம் - தாழ்ந்த நிலை 548 தமர் - தமக்குச் சிறந்தார் 443 தலைச்செல்லா வண்ணத்தால் - பின்னும் அது செய்யாமற் பொருட்டு 561 தலைப்பெய்து - கண்டு 405 தழீஇ - அணைத்து 546 தழீஇயது - நட்பாக்குவது 425 தள்ளினும் - தவறினும் 596 தாக்கற்கு - தாக்குதற்பொருட்டு 486 தாக்குறின் - எதிர்ப்படின் 569 தாமரையினாள் - திருமகள் 617 தாயது - மாநிலம் 610 தாளாண்மை - விடாமுயற்சி 613 தீதொரீஇ - தீயவழியை நீக்கி 422 துணிக - தொடங்குக 467 துணிவுடைமை - ஆண்மையுடைமை 383 துன்புறூஉம் - துன்பத்தை மிகுவிக்கும் 494 துன்னி - பொருந்தி 494 தூ - பற்றுக்கோடு 455 தூங்காமை - விரைந்து செய்யும் தன்மை 383 தூறு - வைக்கோற்போர் 435 தெளிவிலது - வெற்றியாகும் என்னும் உறுதியில்லாத 464 தெற்றென்க - தெளிக 581 தேராது - ஆராயாது 509 தேர்ந்துகொளல் - அருமையை ஓர்ந்து கொள்க 441

தேறப்படும் - தெளியப்படும் 501 தேறற்க - தெளியாதொழிக 509 தேற்றம் - செய்தற்கண் கலங்காமை 513 தேற்றுதல் - தெளிவித்தல் -

தொடங்கற்க - தொடங்கா தொழிக 491

தொட்டனைத்து - தோண்டிய அளவிற்றாக 396 தோட்கப்படாத - துளைக்கப்படாத 418 நயத்தக்க - விரும்பத்தக்க 580 நயவற்க- விரும்பாதொழிக 439 நனி - மிக 403 நன்றின்பால் - நல்லவழி 422 நாகரிகம் - கண்ணோட்டம் 580 நிச்சநிரப்பு – நிலையான வறுமை நிறைத்தல் 532 நீடின்றி - நீடித்தலின்றி 566 நுணங்கிய - நுண்ணிதாகிய 419 நெடும்புனல் - ஆழமுடைய நீர் 495 படியுடையார் - மாபெரு வேந்தர் 606 படிவத்தார் – கோலம் பூண்டு 586 பதம் - செவ்வி 548 பயவா - விளையாத 406 பரியது - எல்லா விலங்கினுந்தான் பேருடம்பினது 599 பரியும் - அஞ்சும் 502 பற்றற்ற கண்ணும் - செல்வந்தொலைந்து வறியனாய வழியும் 521 பற்றுள்ளம் - (பொருளை விடத்தகும் இடத்து விடாது) இறுகப் பற்றும் கஞ்சத்தன்மை 438 பாடூன்றும் - தன் பெருமையை நிலைநிறுத்தும் 597 பிழைத்துணர்ந்தும் - தவறாக உணர்ந்த விடத்தும் 417 புறப்படுத்தன் - வெளிப்படுத்தினவன் 590 பெயக்கண்டு - இடக்கண்டு 580 பெயல் - பருவ மழை 545 பெருமிதம் - மேம்பாடு 431 பேணிக்கொளல் - துணையாகக் கொள்க 442 பொத்துப்படும் – புரைபடும் 466