பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

திருக்குறள்

தமிழ் மரபுரை



தமிழை இந்தியார்க்குக் காட்டிக் கொடுப்பார் சிலர், 'யாதானும் நாடாமால்' என்பதனைப் பிறழவுணர்ந்தோ வேண்டுமென்று பொருள் திரித்தோ, தமிழர் இந்தியைக் கற்க வேண்டு மென்பதற்கு அதைத் தாங்கலாகக் காட்டுவர். திருவள்ளுவர் காலத்தில் இந்தியுமில்லை, இந்தியென்ற பெயருமில்லை. வடமொழியிலுள்ள இலக்கண இசை நாடக மருத்துவ கணித கணிய நூல்கட்கு மூலமான தமிழ் நூல்கள் அன்று அழியாதிருந்ததினால், வடமொழியைக் கூட அவர் கற்கச் சொல்லவில்லை. இக்காலத்தில் அவரிருந்திருப்பினும், பயனில்சொல் பாராட்டுவானைப் பதரென்று கண்டித்தவர் பயனில் மொழியைக் கற்பவனைப் படுபதர் என்றே பழித்திருப்பார். இந்தி எங்ஙனமேனும் பயன்படுமெனின், அங்ஙனம் உலகிலுள்ள மூவாயிரம் அல்லது நாலாயிரம் மொழிகளும் பயன்படத்தான் செய்யும்.

'சாந்துணையுங் கல்லாத வாறு' என்னுந் தொடர், வாழ்நாள் முழுதுந் தொடர்ந்து கல்லாமை யென்றும், இறக்குமட்டுங் கல்வியைக் கடத்திவைப்பதென்றும், இருபொருள் படுவதாகும். இவற்றுள் முன்னதே சிறப்பாம். ‘ஆல்’ இரண்டும் அசைநிலை.

இக் குறள் மேற்கல்வியைக் குறித்தலின், கல்வித்தொழிலாளரையும் கல்விகற்கும் ஆற்றலுள்ளாரையும் நோக்கிக் கூறியதாகக் கொள்க.

398. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து.

(இ-ரை.) ஒருவற்கு -ஒருவனுக்கு; தான் ஒருமைக்கண் கற்ற கல்வி – தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழு பிறப்பளவுந் தொடர்ந்து அரணாக நின்று உதவுந் தன்மையையுடையது.

கல்வியறிவு வினைகள் போல உயிரைப் பற்றித் தொடர்தலின், 'எழுமையும் ஏமாப் புடைத்து' என்றார். 'எழுமை' என்றது தொடர்ந்த எழுமக்கட் பிறப்பை. அல்லாக்கால் அவ் வறிவு பயன்படாமை அறிக. ஏமாப்பு பாதுகாப்பு. உதவுதல் நல்வழியிற் செலுத்தி நலமாக வாழ்வித்தல். ஏழென்பது இங்குக் காலநீட்சிபற்றிய நிறைவெண்.

399. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.

(இ-ரை.) கற்று அறிந்தார் - சிறந்த நூல்களைக் கற்று அவற்றின் பொருளைச் செவ்வையாக அறிந்தவர்; தாம் இன்புறுவது உலகு இன்புறக்