பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

திருக்குறள்

தமிழ் மரபுரை



‘அரங்கு' என்னும் வடிவிற்கும் வடமொழியில் வேரில்லை. நிறத்தை அல்லது சாயத்தைக் குறிக்கும் ரங் (rang) என்னுஞ் சொல்லோடு தொடர்புபடுத்தி, தம் அறியாமையையோ அழுக்காற்றையோ காட்டுவர் வடமொழியாளர்.

தமிழிலுள்ள பொருள்களெல்லாம், அறுக்கப்பட்டது என்பதையே அடிப்படைக் கருத்தாகக் கொண்டிருத்தல் காண்க.

வள் - வட்டு (வள் + து) - வட்டம் - வ்ருத்த (வ., - L. verto = turn.

கொள்ளுதல் = கற்றுக்கொள்ளுதல், கற்றல்.

கொள்வோன் = கற்போன்.

“கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொள' (நன்.பொது. 36)

கோடல் = கொள்ளுதல், பாடங்கேட்டல்.

“கோடன் மரபே கூறுங் காலை. (நன்.பொது.40)

கோளாளன் = கொள்வோன், மாணவன்.

“கோளாளன் என்பான் மறவாதான்." (திரிகடு. 12) “உரைகோ ளாளற் குரைப்பது நூலே." (நன். பொதுப். 37)

கொளுத்துதல் (பி.வி) = கொள்ளச்செய்தல், அறிவுறுத்துதல். “சேணெறி செல்லக் கோணெறி கொளுத்தி" (பெருங். உஞ்சைக். 58 : 70). அறிவுகொளுத்துதல் என்னும் வழக்கை நோக்குக.

கொளுத்து - கொளுத்தி = கொளுத்துகை. 'இ' தொழிற்பெயரீறு. ஒ.நோ; போற்று = போற்றுகை. (பெருங். உஞ்சைக் 58: 70), அறிவு கொளுத்துதல் என்னும் வழக்கை நோக்குக.


கொளுத்து - கொளுத்தி = கொளுத்துகை. 'இ' தொழிற்பெயரீறு. ஒ.நோ: போற்று - போற்றி = போற்றுகை. கொளுத்தி - கோட்டி (மரூஉ). ஒ.நோ: புழைக்கை - பூட்கை. கோட்டி = அறிவுறுத்தல், சொற்பொழிவு, அவைப்பேச்சு.

"புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி கல்லா னொருவ னுரைப்பவுங் கண்ணோடி நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து." (நாலடி.144)