பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

திருக்குறள்

தமிழ் மரபுரை



"ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே” (தொல். 495)

என்றவாறு. பேடிப்பெயர் பெண்பாலீறு பெற்றது. உம்மை முற்றும்மை. இருவர் காமுறுதலும் இழிநிலைப்பட்ட தென்பதாம். இனி, கல்லாதான் சொல்லைப் பிறர் காமுறுதல் முலையிரண்டு மில்லாதாள் பெண்டன்மையைப் பிறர் காமுறுதல்போலும், என்றுமாம்.

403. கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின்.

(இ-ரை.) கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின் - தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின்கண் உரை நிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாயிருப்பராயின்; கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லவரே யாவர்.

உம்மை இழிவுசிறப்பு, அவையின்கண் அமைதியாயிருக்கும் கல்லாதார். பிறராற் பழிக்கப்படாது தம் சிறுமதிப்பைக் காத்துக் கொண்டும், அவையோர்க்கு வெறுப்பை விளைத்து அங்குநின்றும் அகற்றப்படாது அறிஞர் உரைகேட்டு இன்புறுவதொடு அறிவடைந்தும், நல்லவராவ ராதலால் 'நனிநல்லர்' என்றார். 'நனி' உரிச்சொல்.

“கல்லாது நீண்ட வொருவ னுலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே யிராஅ துரைப்பினும் நாய்குரைத் தற்று.” (நாலடி.254)

404.கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார்.

(இ-ரை.) கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் - கல்லாதவனுக்கு ஒரோவழி தற்செயலாகத் தோன்றும் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அவனைப் பாராட்டுமளவில் அதை உயர்வாகக் கொள்ளார்.

உம்மை அருமை குறித்து நின்றது. ஒட்பம் = அறிவொளி. ஒள் - ஒட்பு - ஒட்பம். ஒள் - ஒளி, ஒரோவழி = ஏதேனுமொரு சமையம், மிக அருகி, கல்லாதவனுக்குத் தோன்றும் ஒண்கருத்து, ஏரல் (நத்தை) மணலில் ஊருங்கால்