பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

21



நேருங் கீறலில் தற்செயலாக அமையும் ஓர் எழுத்துவடிவம் போன்றதாகலின், அதை அவனது உண்மையறிவின் விளைவாகக் கருதார் என்பதாம்.

405. கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.

(இ-ரை.) கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகத் தான் மதிக்கும் மதிப்பும், அவனை அங்ஙனம் பிறர் மதிக்கும் மதிப்பும்; தலைப்பெய்து சொல் ஆடச் சோர்வுபடும் - அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும்போது கெட்டுப்போம்.

கற்றவன் என்பது அவாய்நிலையான் வந்தது.

"காணாமல் வேணதெல்லாங் கத்தலாங் கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற் கீச்சுக்கீச் சென்னுங் கிளி”

என்னும் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் தனியன் இக் குறட்பொருளை விளக்குவதாகும்.

406. உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனையர் கல்லா தவர்.

(இ-ரை.) கல்லாதவர் - நூல்களைக் கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி: பயவாக் களர் அனையர் - பிறர்க்குப் பயன்படாமையால் ஒன்றும் விளையாத உவர்நிலத்தையே ஒப்பவராவர்.

“களர்நிலத்துப் பிறந்த வுப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோ ராயினுங் கற்றுணர்ந் தோரைத் தலைநிலத்து வைக்கப் படும்” (நாலடி.133)

என்று கூறுவதால், இங்குக் களர் என்னுஞ் சொற்குக்

“காலாழ் களரின் நரியடும்” (500)

என்னுங் குறளிற்போல் உளைநிலம் என்று பொருள் கொள்ளினும் பொருநதும், உளை நிலையான சேற்றுநிலம். கல்லாதான் பயவாமையாவது அறிவாற் பிறர்க்குதவாமை.