பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

திருக்குறள்

தமிழ் மரபுரை



"பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவுங் கல்லாதார் வாழ்வ தறிதிரேற் - கல்லாதார் சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற் கோதென்று கொள்ளாதாங் கூற்று" (நாலடி.106)

என்னும் நாலடிச் செய்யுள் இங்குக் கவனிக்கத் தக்கது. மாத்தல் அளத்தல், இவ் வினை இன்று வழக்கற்றது. மா என்பது பல்வேறு அளவு குறித்த சொல். மா + அனம் - மானம் = அளவு, படி (மேலை வடார்க்காட்டு வழக்கு). மா + திரம் - மாத்திரம் = அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்பது நெல்லை வழக்கு. இதன் விலை எம்மாத்திரம் (எம்மாத்தம்) என்பது மேலை வடார்க்காட்டு வழக்கு. “வௌவினன் முயங்கு மாத்திரம்” (கலித். 47: 22). மா + திரை - மாத் திரை (மருந்தளவு அல்லது எழுத்தொலியளவு). அளவு - அளபு = மாத்திரை.

“மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ" (தொல். செய். 1)

"கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை.” (தொல். எழுத்து. 7)

மா என்பது தொன்றுதொட்டு வழங்கிவரும் தமிழ்க் கீழ்வாயெண்ணுப் பெயர்களுள் ஒன்று. அதன் அளவு (1/20) (1/30) மா (ம.) மாவு (தெ.).

அரைமா, ஒருமா, ஒருமாவரை (ஒருமாரை), இருமா, மும்மா, நான்மா, மாகாணி என்பன அவ் வளவால் ஏற்பட்ட எண்ணுப் பெயர்கள்.

ஒரு வேலியில் இருபதிலொன்றான நில அளவு மா எனப்படும்.

"மாநிறை வில்லதும் பன்னாட் காகும்" (புறம்.184)

ஓர் எடையில் இருபதிலொன்றான நிறையும் மா எனப்படும் (தொல். 170. உரை).

இங்ஙனம் பல்வேறு அளவு குறித்த மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர், ஆரியர் வருகைக்கு முற்பட்ட குமரிநாட்டு முழுத் தூய்மைத் தமிழ்ச்சொல். ஆதலால் இருக்குவேதத்தில் மா. மாத்ரா என்னும் சொற்கள் ஆளப்பட்டிருத்தல் நோக்கி மயங்கற்க. மா என்னும் முதனிலை போன்றே, அதனின்று திரிந்த மாத்திரம், மாத்திரை என்ற சொற்களும் தூய தமிழ் என அறிக. இன்றும் அதுமாத்திரம், கேட்டமாத்திரத்தில், மாத்திரைக் கோல் (வரையிட்ட அளவுகோல்) எனப் பொது வழக்காக வழங்குதல் காண்க.

அளபு, மாத்திரை என்னும் இருசொற்களும் தமிழின் சொல்வளத்தையே காட்டும். "மாத்திரை யின்றி நடக்குமேல்" (நாலடி. 242) என்பதனால்,