பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

35



நோய்செய்யும் துன்பத்தை நோயென்றார். நோவது நோய். காத்தலாவது வராமல் தடுத்தல், அல்லது தம்மைத் தாக்காதவாறு தமக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் தேடி வைத்துக் கொள்ளுதல். வருமுன் காத்தல், வருங்கால் காத்தல், வந்தபின் காத்தல் என்னும் மூவகைக் காப்பினுள் முதலதே தலையாயதும் செய்ய வேண்டுவதும் எனக் கூறியவாறு.

430.அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர்.

(இ-ரை.) அறிவு உடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் வேறொன்று மிலராயினும் எல்லாம் உடையவராவர்; அறிவு இலார் என் உடையரேனும் இலர் - அறிவில்லாதவர் பிறவெல்லா முடைய ராயினும் ஒன்றுமில்லாதவ ராவர்.

எல்லாச் செல்வங்களும் அறிவாலேயே ஆக்கவுங் காக்கவும் படுதலின் அறிவுடையாரை ‘எல்லா முடையார்' என்றும்; பிற செல்வங்களெல்லாம் ஏற்கெனவே யமைந்திருப்பினும் அவற்றை அழியாமற் காத்தற்கும், அவற்றிற்குத் தெய்வத்தால் அழிவு நேர்ந்தவிடத்துப் புதிதாய்ப் படைத்தற்கும், வேண்டிய கருவியாகிய அறிவின்மையின், அறிவிலாரை 'என்னுடைய ரேனு மிலர்' என்றும் கூறினார்.

"நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” (நாலடி. 251)

அதி. 44 - குற்றங்கடிதல் அதாவது, ஐம்பெருங் குற்றமென்றும் அறுவகை உட்பகை யென்றும் சொல்லப்படும் குற்றங்களையெல்லாம், அரசனும் பிறரும் தங்கண் நிகழாதவாறு விலக்குதல். கொலை, களவு, பொய், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, செருக்கு என்பன அறுவகை யுட்பகை.

வடநூலார் இவற்றைச் சிறிது வேறுபடவுங் கூறுவர். ஆயின், அவ்விருவேறு பாகுபாட்டிற்கும் மூலம் தமிழ் என்பது தேற்றம். எனினும், அரசியற் பாகுபாடு தன் துறைக்கேற்ப மதவியற் பாகுபாட்டினின்றும், சிறிது வேறுபடும்.

அறிவுடையார்க் கல்லது இக் குற்றங்களைக் கடிதல் கூடாமையின், இது அறிவுடைமையின் பின் வைக்கப்பட்டது.