பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

திருக்குறள்

தமிழ் மரபுரை



431. செருக்குங் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.

(இ-ரை.) செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டுத் தன்மையையுடைத்து.

செருக்கினாற் காவற்கடமை தவறுதலும் பெரியாரைப் பிழைத்தலும், சினத்தினால் ஐம்பெருங்குழுவும் உறுதிச்சுற்றமும் போன்றவற்றின் அன்பை இழத்தலும், சிறுமையினால் பழியும் உயிர்ச்சேதமும், நேருமாதலின், அக்குற்றங்களில்லாத அரசரின் செல்வம் வீறுபெற்ற தென்றார். சிறியோர் இயல்பு என்னுங் கருத்தால் அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது.

432. இவறலு மாண்பிறந்த மானமு மாணா வுவகையு மேத மிறைக்கு.

(இ-ரை.) இவறலும் - செலவிடவேண்டிய வகைக்குச் செலவிடாத கடும்பற்றுள்ளமும்; மாண்பு இறந்த மானமும் - தவறான தன்மானமும்; மாணா உவகையும் - அளவிறந்த மகிழ்ச்சியும்; இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றங்களாம்.

இவறலால் மேற்கூறிய ஈகை (382), வகுத்தல் (285), கொடையளி, குடியோம்பல் முதலியன செவ்வையாய் நிகழா. மாண்பிறந்த மானமாவது, ஐங்குரவர்க்கும் அந்தணர், சான்றோ ரருந்தவத்தோர் முதியோர்க்கும் வணக்கஞ் செய்யாமை. மாணாவுவகையாவது மகிழ்ச்சியின் மைந்துற்று இகழ்ச்சியிற் கெடுதல் (529).

433. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.

(இ-ரை.) பழி நாணுவார் - பழிக்கு அஞ்சுவார்; தினைத்துணை ஆம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்மிடம் தினையளவு சிறிதாகக் குற்றம் நேரினும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.

தினை, பனை என்பன அளவுப்பெயர்கள்; இங்குச் சிறுமை பெருமை பற்றியே வந்தன. உம்மை இழிவுசிறப்பு. 'குற்றம் வகுப்பொருமை. கொள்ளுதல் கொண்டு நீக்குதல்.