பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

39



“வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே." (புறம்.33)

"அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி." (புறம்.113)

ஒரு நாட்டிற்கு முதன்மையாகச் சிறந்த பொருள் உணவேயாதலின், உணவை விளைக்கும் உழவுத்தொழிலைப் பெருக்க நீர்நிலைகள் அமைப்பதும் வரி குறைத்தும் கடனுதவியும் உழவரை ஊக்குவதும், பொருட்பாற் படுவனவாம்.

"நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரு நிலனும் புணரி யோரீண் டுடம்பு முயிரும் படைத்திசி னோரே

நிலனெளி மருங்கி னீர்னிலை பெருகத் தட்டோ ரம்ம விவட்டட் டோரே தள்ளா தோரிவட் டள்ளா தோரே” (புறம்.18)

"பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் னடிபுறந் தருகுவ ரடங்கா தோரே." (புறம். 25)

பொருளாற் படைதிரட்டிப் பிறநாடு கைக்கொண்டு இறையும் திறையுமாகிய செல்வம் பெறுவது, பொருளாற் பொருள் செய்தலாம்.

"பொன்னி னாகும் பொருபடை யப்படை தன்னி னாகுந் தரணி தரணியிற் பின்னை யாகும் பெரும்பொரு ளப்பொருள் துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே." (சீவக. விமலை. 25)

புலவர், பாணர், கூத்தர், பொருநர் முதலியோர்க்கு நாள்தொறும் பரிசு வழங்குவது, செல்வப் பொருளாற் கல்விப் பொருள் வளர்த்தலாம்.

புதுப்புனலாட்டுவிழா, வேந்தன் (இந்திர) விழா முதலிய திருவிழாக்கள், பட்டிமண்டபம், வேட்டையாடல் முதலியவற்றிற்குச் செலவிடுவது. இன்பத்தின்பாற் படுவதாம்.