பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

45



447. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.

(இ-ரை.) இடிக்கும் துணையாரை ஆள்வாரை - குற்றங் கண்டவிடத்து வன்மையாய்க் கடிந்து கூறும் உண்மைத் துணையாளரைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டொழுகும் அரசரை; கெடுக்குந் தகைமையவர் யாரே - கெடுக்குந் திறமையுடைய பகைவர் உலகத்தில் யார்தான்?

குற்றங்கள் அறங்கடையும் (பாவமும்) அரச நேர்பாடு (நீதி) அல்லனவும். உண்மைத் துணையாவது அக் குற்றமின்மையும் அரசன்கண் அன்புடைமையும். அத்தகையார் அரச நெறியினின்று நீங்கவிடாமையின். அவரைத் துணைக்கொண்டவர் ஒருவராலுங் கெடுக்கப்படார் என்பதாம். இடிக்குந்துணையார் என்பதற்கு நெருங்கிச் சொல்லுமளவினோர் என்று உரைக்கும் உரை சிறந்ததன்று.

448. இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.

(இ-ரை.) இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாத காப்பாற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும் - தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.

‘இல்லாத ஏமரா' என்னும் பெயரெச்ச வடுக்கு கரணிய (காரண) கருமி(காரிய)ப் பொருளது. ஏ+மரு(வு) = ஏமரு. ஏமருதல் காப்புறுதல். உம்மை எதிர்மறை குறித்த வைத்துக்கொள்வுப் பொருளது. தானே கெடுதல், ஓட்டுநன் இல்லாத வண்டி யிழுக்குங் காளை நெறியல்லா நெறிச்சென்று பள்ளத்தில் விழுந்து கெடுவது போன்றது.

449. முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.

(இ-ரை) முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொரு ளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியமும் (இலாபமும்) இல்லை; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அது போல, தம்மோடு சேர்ந்து தம் அரசை,