பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

47



(இ-ரை.) பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் சிறியோர் கூட்டத்திற்கு அஞ்சுவர்; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - சிறியோரோ அக் கூட்டத்தைக் கண்டவுடன் அதைத் தமக்குச் சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்வர்.

சிறியோர் சேர்க்கையால் தம் அறிவும் ஒழுக்கமும் கெடுவதும் அதனால் இருமையுந் துன்பம் நேர்வதும் நோக்கி, பெரியோர் அதனின்று விலகித் தம்மை முற்படக் காத்துக்கொள்வர். அஞ்சுதல் அஞ்சிவிலகுதல். “இனத்தை இனம் தழுவும்”. “இனம் இனத்தோடே." ஆதலால் சிறியோரொடு சிறியோர் சேர்ந்துகொள்வர். பண்பியின் தொழில் பண்பின்மேல் ஏற்றப்பட்டது. சுற்றியிருப்பது சுற்றம். சூழ்தல் அச் சுற்றத்திற்கு இனமாக வளைதல்.

452. நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு.

(இ-ரை.) நீர் நிலத்து இயல்பான் திரிந்து அற்று ஆகும் - நீரானது தான் சேர்ந்த நிலத்தின் வகையினால் தன் தன்மை வேறுபட்டு அந் நிலத்தின் . தன்மையதாம்; மாந்தர்க்கு அறிவு இனத்து இயல்பு அது ஆகும் - அதுபோல, மாந்தரது அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் வகையால் தன் தன்மை வேறு பட்டு அவ் வினத்தின் தன்மையதாம்.

இனி, மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும் என ஒரே தொடராக்கினும் அமையும். இப் பொருள்கோட்கு, 'அறிவு' எழுவாய்; 'அற்றாகும்' பயனிலை. இரண்டாம் 'ஆகும்’ பெயரெச்சம். அணி உவமை.

இரு தொடராக அல்லது சொல்லியமாக (வாக்கியமாக)க் கொள்ளின் எடுத்துக்காட்டுவமை. மழைபெய்யுமுன் வானத்தின்கண் நின்றநிலையில் தன்னியல்பிலிருந்த நீர், நிலத்தொடு சேர்ந்தவிடத்துத் தன் நிறமும் சுவையும் மணமும் ஆற்றலும் நிலத்திற்கேற்ப வேறுபட்டாற்போல், மாந்தன் அறிவும் அவன் தனித்து நின்றவழித் தன்னியல்பிலிருந்து, ஓர் இனத்தொடு கூடியவழி அவ் வினத்திற்கேற்ப நோக்குந் தன்மையும் வேறுபடும் என்பதாம். அன்னது - அற்று (அன்+து); “மலரோடு (பூவோடு) சேர்ந்த நாரும் மணம்பெறும்” என்பது