பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

53



போல்வது. 'செய்வினை' செய்தறிந்த வினை அல்லது செய்யத் தொடங்கிய வினை. பின்னைப் பொருட்கு ஊக்குதல் மேலுஞ் செய்யத்துணிதல். எச்சவும்மை செய்யுளால் தொக்கது.

464. தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர்.

(இ-ரை.) இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இழிவு என்னும் குற்றம் உண்டாதற்கு அஞ்சும் மானியர்; தெளிவு இலதனைத் தொடங்கார் - வெற்றியாகும் என்னும் உறுதியில்லாத வினையைச் செய்யத் தொடங்கார்.

தொடங்கின் இடையில் மடங்கவும் தோல்வியடையவும் நேருமாதலின் ‘தொடங்கார்' என்றார். இழிவு தோல்வியடைந்து கெடுவதுடன் உலகோர் கூறும் பழியால் நேர்வது.

465. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு.

(இ-ரை.) வகை அறச் சூழாது எழுதல் - அரசன் தன் பகைவரை வெல்லுதற்கேற்ற வழிகளை யெல்லாம் தீர எண்ணாது. அரைகுறையாய் எண்ணிய வளவில் அவர்மேற் படையெடுத்துச் செல்லுதல்; பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரைப் பாதுகாப்பான நிலைமையி லிருத்தி மேலும் வலியுறச் செய்வதொரு நெறியாம்.

வெல்வதற்கேற்ற வழிகளாவன: வலியிடங் காலம் முதலியவற்றொடு பொருந்த வெட்சி தும்பை யுழிஞை யென்னும் மூவகைப் போர்முறைகளும், படைவகுப்பு வகைகளும், தாக்குங் காலமும், பகைவர் எதிர்த்துப் பொரினும் தற்காத்து நிற்பினும் தான் செய்ய வேண்டிய வினைகளும் கையாளும் வலக்காரங்களும், படைத்தலைவர் தொடரும் வரிசையும், வெற்றியால் விளையும் பயனும் முதலாயின. இவற்றுள் ஒன்று குறையினும் வினை கெடுமாதலின், வகையறச் சூழ்தல் வேண்டுமென்றார்.

‘பாத்திப்படுப்பது' என்பது குறிப்புருவகம். வினைத்திறங்களையெல்லாம் முற்றவெண்ணாது சென்று பொருது தோல்வியுறுவது பகைவரை வலுப்படுத்தவே செய்யுமாதலால், அது மேற்கொண்டு செழித்து வளர