பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

59



வேண்டும்; மெலியராயிருப்பின் அவர் துணைவலி யறிந்து பகை கொள்ளலாம். இவ் விரண்டும் செய்யாதவன் அமைதியா யிருந்தாலே கேடுண்டாம். அங்ஙனமிருக்க, தான் மெலியானாயிருந்தும் தன்வலி யறியாது வலியான் மேற் செல்லின் விரைந்து கெடுவான் என்பதாம். 'ஒழுகான்,' 'அறியான்' என்பன எதிர்மறை முற்றெச்சங்கள். 'வியத்தல்' அதன் விளைவான பகைத் தலைக் குறித்தது.

475. பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.

(இ-ரை.) பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - வைக்கோலினும் நொய்ய மயில்தோகை யேற்றிய வண்டியும் அச்சு முறியும்; அப் பண்டம் சால மிகுத்துப் பெயின் – அப் பொருளை வண்டி தாங்கும் அளவிற்கு மிஞ்சி யேற்றின்.

மயில்தோகையும் அளவுக்குமிஞ்சி வண்டியி லேற்றின் அச்சொடியும் என்பது, பகைவர் தனித்தனி மிகச் சிறியாராயினும் மிகப் பலர் ஒன்றுகூடின், தனிப்பட்ட பகைவன் எவ்வளவு வலியவனாயினும் அவனை வென்று விடுவர் என்னும் பொருள்பட நிற்றலால், பிறிதுமொழிதல் என்னும் அணியாம். இது நுவலா நுவற்சியென்றும் ஒட்டு என்றுஞ் சொல்லப்படும். பகைவர் சிறியராயினும் மிகப் பலரை ஒருங்கே பகைக்கக் கூடாதென்பதும், பகைவர் வலியைத் தனித்தனி அறியாது தொகுத்தறிதல் வேண்டுமென்பதும், இதனாற் கூறப்பட்டன. உம்மை இழிவுசிறப்பு. சாகாடு என்பது சகடம் என்னும் சொல்லின் பல்வடிவுகளுள் ஒன்றாம். இதுவுந் தென்சொல்லே. 'இறும்' என்னும் சினைவினை முதல்மேல் நின்றது, 'காலொடிந்தான்' என்பதில் 'ஒடிந் தான்' என்பது போல. 'சாலமிகுத்து' மீமிசைச்சொல்.

476. நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி னுயிர்க்கிறுதி யாகி விடும்.

(இ-ரை.) நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒரு மரத்தின் உச்சிக் கிளையில் ஏறிநின்றவர் தம் ஊக்கத்தினால் அதன் மேலும் ஏற முயல்வாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அம் முயற்சியால் அவர் உயிர்க்கு முடிவு நேர்ந்துவிடும்.

நுனிக்கொம்பர் என்றது உச்சாணிக் கொம்பை. 'நுனி' இங்கு மரத்தின் நுனி; கிளையின் நுனியன்று. தாழ்ந்த கிளைநுனியாயின் ஒருவர் சாவிற்குத் தப்பலாம். உச்சிக் கிளையினின்று விழுந்தவர் தப்ப முடியாது. பகைமேற்