பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

70

திருக்குறள்

தமிழ் மரபுரை



மனத்திண்மை யில்லாவிடத்து, இடமும் பிறவும் வாய்த்தும் பயனின்மையின், அஞ்சாமையை இன்றியமையாத பெருந்துணையாகக் கூறினார்.

498. சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா னூக்க மழிந்து விடும்.

(இ-ரை.) சிறுபடையான் செல் இடம் சேரின் - சிறுபடை யரசன் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் சென்று சேரின்; உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் - அவனை வெல்லக் கருதிச் சென்ற பெரும்படை யரசன் அவனை வெல்லும் வழியின்மையால் தன் ஊக்கங் கெட்டு வினை யொழிந்து திரும்புவான்.

விடுதல் விட்டு நீங்குதல், வினைக்கு இடமின்மையால் ‘விடும்' என்றார். இது, உடும்பு முயல் முதலியவற்றைத் துரத்திச் சென்ற நாய், அவை வளைக்குள் நுழைந்தபின் திரும்பி வருவது போன்றது. சிறுபடையான் புகுந்த இடத்திற்குச் செல்லும் வழி பெரும்படை செல்ல முடியாவாறு மிக ஒடுங்கியிருக்கு மாதலாலும், ஒவ்வொருவராகவோ சிற்சிலராகவோ செல்லத் துணியின் மேலிருந்தோ ஒரு கோடியில் நின்றோ சிறுபடை பெரும் படை முழுவதையும் வெட்டி வீழ்த்திவிடு மாதலாலும், மலைவழியும் மரமடர்ந்த காட்டுவழியுமாயின் பெரும்படை வழிதெரியாது மயங்கி இடர்ப்பட நேருமாதலாலும், 'ஊக்க மழிந்துவிடும்' என்றார். 1841ஆம் ஆண்டு நிகழ்ந்த முதலாம் ஆபுகானியப் போரில், இந்தியப் படை முழுவதும் கைபர்க் கணவாயிற் சுட்டுக் கொல்லப்பட்டது இங்கு நினைக்கத் தக்கது. 'உறு' உரிச்சொல்.

499. சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது.

(இ-ரை.) சிறைநலனும் சீரும் இலர் எனினும் - அழித்தற்கரிய அரண் சிறப்பும் பெரும்படையும் பெரும்பொருளுமாகிய பிறபெருமையும் இல்லாதவராயினும்; மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது - போர் வினைக்குச் சிறந்த மாந்தரை அவர் நிலையாக வதியும் இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிதாம்.

ஒட்டல் பொருந்துதல். இங்குப் பொருந்திப் பொருதல். ஆதலால், பரிமேலழகர் குறித்தவாறு வேற்றுமை மயக்கம் அன்றாம். அரிமாவும் வரிமாவும்போற் பொரும் ஆண்மை யுடையாரைத் தொகைச் சிறுமை நோக்கி யிகழ்ந்து அவரிருப்பிடஞ் சென்று தாக்கின், அவர் மறமிகுதியானும் வேறிட