பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

74

திருக்குறள்

தமிழ் மரபுரை



என்றமை காண்க. ஏகாரம் தேற்றம். கண்ணது - கட்டு (கண் + து), 'குற்றத்தி னீங்கி வடுப்பரியு 'நாண்' உண்மையுமின்மையும் நால்வகைத் தேர்விலும் வெளிப்பட்டுவிடும். குடிப்பிறப்புத் தக்கார் உரையாலும் உறவினராலும் அறியப்படும்.

503. அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா லின்மை யரிதே வெளிறு.

(இ-ரை.) அரிக கற்று ஆசு அற்றார் கண்ணும் - அரும்பொருள் கூறும் சிறந்த நூல்களைக் கற்று ஐவகையும் அறுவகையுமாகிய குற்றங்கள் நீங்கியவ ரிடத்தும்; தெரியுங்கால் வெளிறு இன்மை அரிதே - நுட்பமாக ஆராயுமிடத்து அறியாமை அல்லது குற்றம் அறவுமில்லாமை காண்பது அரிதே.

பிறரிடத்துள்ள குற்றம்போல் விளங்கித் தோன்றாமல் மிகச் சிற்றளவா யிருப்பதால் 'தெரியுங்கால்' என்றார். எல்லா மறிந்தவரும் எக்குற்றமு மில்லாதவரும் இவ் வுலகத் தின்மையால், குற்றமற்றவனையே வினைக்கமர்த்த வேண்டுமென்று மேன்மேலும் ஆராய்ந்து கொண்டிருப்பின், இது எல்லையின்றி யோடி ஒரு முடிவிற்கும் வர இடந்தராதாதலால், ஓரிரு சிறு குற்றங்குறைக ளிருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது இன்றியமையாத திறமுங் குணமுமுடையவரை அமர்த்திவிடுக என்பதாம். உள்ளீடில்லாத வெறுமைபோ லிருத்தலால் அறியாமையும், விளையாத வெண்மரம் போலிருத்தலாற் குற்றமும் வெளிறெனப்பட்டன. உம்மை உயர்வுசிறப்பு. ஏகாரம் தேற்றம், வெள் - வெளி - வெளில் - வெளிறு.

“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”. (குறள். 972)

"ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும்" (குறள்.133)

என்று ஆசிரியர் கூறியிருப்பதால், குடி என்பது இங்குப் பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப்பிரிவினைபற்றிய சிறு வகுப்பன்று. மேலும், சோழனொருவன் மந்திரிப் பதவிக்குத் தக்கவன் நால்வகுப்பாருள் எவ் வகுப்பான் என்று வினவியதற்குப் பிற்காலத்து ஔவையார் ஒருவர்,

"நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு"