பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

79



வருவாய்கள் அரசிறை (புரவுவரி), திறை, தண்டம், புதையல், உழவு, கால்நடை வளர்ப்பு, கைத்தொழில், வாணிகம் முதலியன. செல்வங்கள் அவற்றால் வருவனவும், அரசனுக்கும் குடிகட்கும் இன்ப நுகர்ச்சிப் பொருட்டு அமைக்கப்படுவனவுமாம். இடையூறுகள் அரசியல் வினைஞர், அரசன் சுற்றத்தார், பகைவர், கள்வர், கொள்ளைக்காரர், அஃறிணை யுயிரிகள், இயற்கை, தெய்வம் என்றிவரால் வரும் நலிவும் இழப்பும். அஃறிணை யுயிரிகள் பூச்சிபுழுக்களும் காட்டு விலங்குகளும் போல்வன. இயற்கையால் நேர்வன வெள்ளப்பாழ் புயற்சேதம் முதலியன. தெய்வத்தால் வருவன கொள்ளை நோய், பஞ்சம் முதலியன. இயற்கை யென்பது இயல்பாக நிகழ்வதன் மிகையென்றும், தெய்வம் என்பது இயற்கைக்கும் மக்கள் தடுப்பிற்கும் அப்பாற்பட்ட தென்றும், வேறுபாடறிக.

513. அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு நன்குடையான் கட்டே தெளிவு.

(இ-ரை.) அன்பு - அரசனிடத் தன்பும்; அறிவு - அரசனுக்கு ஆவனவற்றையும் வினைக்கு வேண்டுவனவற்றையும் அறியும் அறிவும்; தேற்றம் - வினைசெய்தற்கண் கலங்காமையும்; அவாவின்மை - பொருள் கை சேர்ந்த வழியும் தீய வழியாற் பொருள் வருமிடத்தும் அதன்மேல் ஆசையின்மையும் ஆகிய; இந் நான்கும் நன்கு உடையான் கட்டே தெளிவு - இந் நாற்குணங்களையும் உறுதியாக வுடையவன் மேலதே அரசன் வினையை விட்டிருக்குந் தெளிவாம்.

இந் நாற்குணமும் நன்கு உடையான் வினைக்கண் திறம்பானென்று அரசன் கருதுவனாகலின், அவனிடத்ததே தெளிவென்று இடவுரிமைப் படுத்திக் கூறினார். கண்ணது - கட்டு (கண் + து). ஏகாரம் தேற்றம்.

514. எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகு மாந்தர் பலர்.

(இ-ரை.) எனை வகையான் தேறியக் கண்ணும் - எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து வினைக்கு அமர்த்திய பின்பும்: வினை வகையான் வேறு ஆகும் மாந்தர் பலர் - அவ் வினையின் தன்மையால். தன்மை வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலராவர்.

ஒரு தனிப்பட்ட கொள்கையுடைய அரசியற் கட்சித் தலைவர் ஆளுநராக அமர்த்தப்பெறின், அக் கட்சிக் கொள்கையை விட்டுவிடுவதும்,