பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86

திருக்குறள்

தமிழ் மரபுரை



எல்லாவகையிலும் மக்கள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ தலையாயார் இடையாயார் என்றோ, முதல்வகுப்பினர் இரண்டாம் வகுப்பினர் எனப் பல வகுப்பினராகவோ, இயற்கையாகவும் செயற்கையாகவும் பாகுபட்டிருத்தலால், தன்மானமுள்ள மேலோர் நீங்காவாறு பொதுநோக்கை விலக்கி, எல்லாரையும் தழுவுமாறு வரிசைநோக்கை நெறியிட்டார். 'வேந்தன்' என்பது இங்குத் தன் சிறப்புப் பொருள் குறியாது அரசன் என்னும் பொருள் குறித்து நின்றது.

529. தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும்.

(இ-ரை.) தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன்பு அன்பான வுறவினராயிருந்து ஏதேனுமொரு தக்க கரணியம்பற்றித் தன்னைவிட்டுப் பிரிந்து போனவர் மீண்டும் வந்து அன்பாக வுறவாடல்; அமராமைக் காரணம் இன்றிவரும் - இடையில் அன்பாற் பொருந்தாமைக்கு ஏதுவாயிருந்த நிலைமை நீக்கின் தானே நேர்வதாம்.

அரசனது தவற்றொழுக்கத்தினாலோ அவன் தமக்கு ஏற்காதன செய்ததனாலோ அவனை விட்டுப் பிரிந்துபோன மெய்யன்பரான உறவினர், அக் குற்றங்கள் நீங்கின், தாமாகத் திரும்பவந்து சேர்ந்துகொள்வ ராதலால், அதற்கு ஒரு முயற்சியும் வேண்டுவதில்லை யென்பது கருத்து. அமர்தல் பொருந்துதல் அல்லது அன்புகூர்தல். 'அமராமைக் காரணமின்றி' என்பதால், முன்பு அது நேர்ந்தமை அறியப்படும். 'சுற்றம்' என்றது சுற்றமாயொழுகுதலை.

530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.

(இ-ரை.) உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை - கரணியமின்றித் தன்னிடத்தினின்று பிரிந்துபோய்ப் பின்பு ஒரு பயன் நோக்கித் திரும்பி வந்த உறவினனை; வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் - அரசன் அப் பயனைச் செய்துவைத்து ஆராய்ந்து தழுவிக்கொள்க.

'உழைப்பிரிந்து' என்று வெறிதாய்க் கூறினதினாலும், 'காரணத்தின் வந்தானை' என்று விதந்ததினாலும், பிரிதற்குக் காரணமின்மை வெளியாம். கருதிவந்த பயனைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்துபோய்ப் பகையோடு கூடுவானாதலின் 'இழைத்திருந்து' என்றும், அன்பின்றிப் பிரிந்துபோய்ப் பின்னும் பயன் நோக்கி வந்தமையின் ‘எண்ணிக் கொளல்' என்றுங் கூறினார். முதற்காலத்தில் தமிழக அரசர் மூவேந்தராகவே யிருந்ததினால், அரசன்