உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

வேர்ச்சொற் கட்டுரைகள் மன்றங் கண்டே” (புறம். 220, உரை). 6. போர்க்களப் பரப்பின் நடுவிடம். "செஞ்சுடர்க் கொண்ட குருதி மன்றத்து" (பதிற். 35 : 8). 7. மக்கள் கூடும் வெளியிடம். “மன்றம் போழும் மணியுடை நெடுந்தேர்" (குறுந். 301). 8. ஆன்தொழு. "புன்றலை மன்றம்" (குறுந். 64). 9. பேய்கள் கூடுமிடம்.

"காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டு

மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும்."

(LD600fCLD. 6: 82-3)

10. பறவைகள் கூடுமிடம். "புள்ளிறை கூரும் வெள்ளில் மன்றமும்” (மணிமே. 6 : 85). 11. மக்கள் குடியிருக்கும் வீடு. "வதியுஞ் சில மன்றமே” (இரகு. நகரப். 71). 12. நெடுந்தெரு (சூடா.). 13. நோன்பிகள் கூடுமிடம்.

"சுடலை நோன்பிக ளொடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்"

14. மணம் (பிங்.)

(LD600fCLD. 6:86-7)

'அம்' ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டாதலால், மன்றம் என்பது இலக்கண நெறிப்படி பெருமன்றைக் குறிக்கும்.

மன்று - மன்றகம் = அம்பலம். "மன்றகத்தே நம்பி மாடமெடுத்தது” (திருமந்.148)

மன்று-மன்றல் = 1. தமிழத் திருமணம். 2. இருபாற் கூட்டம். "மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்" (தொல். களவு. 1). 3. புணர்ச்சி. "மன்றன் மாமயில்" (சீவக. 2171), 4. நெடுந்தெரு. "மன்றல் வருஞ்சேனை" (குற்றா. குற.

73 : 2). மணம் (பிங்.).

மன்று-மந்து = 1. ஆன்கணம். 2. ஆன்தொழு. 3. எருமைநிரை. 4. நீல மலைத் துடவர் குடியிருப்பு.

எ-டு: ஒற்றைக்கல் மந்து(Ootacamund).

துடவர்க்கு எருமைநிரை யோம்பலே பிழைப்புவழியாதலால், அவர் குடியிருப்பு மந்து எனப்பட்டது. ஆட்டுப் பட்டிகளும் மாட்டுப் பட்டிகளும் இருந்த வூர்கள், பட்டியென்றே பெயரீறு பெற்றிருத்தலை நோக்குக.

ஒரே பெருங்கல் இருந்த மந்து ஒற்றைக்கல் மந்து எனப்பட்டது. தெலுங்கு நாட்டில் ஒரு பகுதி ஒரு கல் நாடு அல்லது ஓராங்கல் (Warangal) நாடு எனப் பெயர் பெற்றிருத்தலைக் காண்க.

ஆங்கிலர் முதன்முதல் நீலமலையில் அடைந்த இடம் ஒற்றைக்கல் மந்து. அதனால் அது சிறப்புப் பெற்றது. அதன் பெயரின் ஆங்கில வடிவை யொட்டி, உதகமண்டலம் என்னும் பெயரை அமைத்துக் கொண்டனர் வடமொழி வெறியர். அதன் மரூஉவான உதகை என்பதற்குத் தலைமாறாக, ஒற்றகை என்று வழங்குவதே தமிழ்நெறிக் கேற்றதாம்.