உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

=

33

மந்து மந்தை 1. கால்நடைக் கூட்டம். ஆடுமாடுகள் மந்தை மந்தையாய் மேய்கின்றன (உ.வ.). 2. ஊரின் பொது மேய்ச்சலிடம், மந்தைவெளி (உ.வ.). 3. ஊரிடைப் பொது வெளியிடம். 4. ஆடுமாடு மேய்க்கும் குலத்தாருள் ஒரு பிரிவுப் பெயர்.

தெ. மந்து, க. மந்தெ.

மன்-மனை = 1. பலர் கூடி அல்லது நிலைத்து வதியும் வீடு. “சீர்கெழு வளமனை திளைத்து” (சீவக. 828). 2. வீடு கட்டுதற்குரிய வெறுநிலம். ஒரு மனை 2400 சதுரஅடி. (உ.வ.). 3. அல்லும் பகலும் வீட்டில் வதியும் மனைவி. "பிறன்மனை நோக்காத பேராண்மை” (குறள். 148). 4. வீட்டில் வதியும் குடும்பம். 5. துறவுக்கு எதிரான இல்வாழ்க்கை. “மனைத்தக்க மாண்புடைய ளாகி” (குறள். 51). 6. சூதாட்டிற்கு அல்லது கணியத்திற்கு வரையும் அறை. ம. மன, க. மனெ.

ஒ.நோ: E. manor, f. ME. f. AF. maner, OF. manoir, f. L. manere, remain. E. manse, f. ME. f. med.L. mansus, house (manere, mans, remain).

E. mansion, large residence, f. ME. f. OF. f. L. mansionen, f. mansus, f. manere, mans, remain.

மனை-மனைவி = 1. மனையிலுறையும் வாழ்க்கைத் துணைவி. “இன்ப மருந்தினான் மனைவி யொத்தும்" (சீவக. 1895). 2. முல்லை மருத நிலங்களின் தலைவி (திவா.). 3. மனையுடையாள். “பூமுளரி மனைவி” (உபதேசகா. சிவவிரத. 215).

=

மன் + திரம் = மன்றிரம்-மந்திரம் 1. வீடு. "மந்திரம் பலகடந்து கம்பரா. ஊர்தேடு. 138). 2. அரண்மனை (பிங்.). 3. தேவர் கோயில் (பிங்.). "ஆதி தனது மந்தி ரத்து" (கந்தபு. காமதகன. 67). 4. உறைவிடம். “மான் மதங் கமழ்கொடி மந்தி ரந்தொறும்” (பாரத. வேத்திர. 29). 5. மண்டபம். 6. குகை. “அரிமந்திரம் புகுந்தா லானை மருப்பும்" (நீதிவெண். 2). 7. குதிரைச் சாலை (பிங்.). 8. குதிரைக் கூட்டம் (சூடா.)

மந்திரம்-வ. மந்திர.

மக்கள் உறைவிடத்தையும் அரிமாக் குகையையும் குதிரைக் கூடத்தையும் குறிக்கும் மந்திரம் என்னும் சொல் ஒன்றே. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, குதிரைச் சாலையைக் குறிக்கும் மந்திரம் என்னும் சொல்லை வேறென மயங்கிப் பிரித்துக் கூறியது வழுவாகும். மக்கள் படுக்கை, விலங்கின் படுக்கை, பறவைக் கூடு ஆகிய மூன்றையும், சேக்கை யென்னும் ஒரே சொல் பொதுவாகக் குறித்தல் காண்க.

சூழ்வினையைக் குறிக்கும் மந்திரம் என்னும் சொல் வேறு. அது அமைப்பில் ஒத்திருப்பினும், அதன் முதனிலையான மன் என்னும் சொல் முன் என்பதன் திரிபாகும். முன்னுதல் = கருதுதல், சூழ்தல். மன் +

திரம்-