உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

வேர்ச்சொற் கட்டுரைகள்

மன்றிரம்-மந்திரம்-வ. மந்த்ர. மன் = மந்திரம். (பிங்.). இது முதனிலைத் தொழிற்பெயரும் தொழிலாகு பெயருமாகும்.

மன்(பெ.) = 1. பெருமை. (யாழ். அக.). 2. பெரியோன், தலைவன். "மன்னுயிர் நீத்த வேலின்" (பு.வெ. 4 : 23, கொளு). 3. கணவன். “மன்னொடுங் கூடி வானகம் பெற்றனர்" (சிலப். 25 : 59). 4. அரசன். "மன்னுடை வேலினாய்' (சீவக. 1200). 5. அரசு. "மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய" (தொல். மரபு. 84).

மன்-மன்னன் = 1. அரசன். “மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்." (புறம். 186). 2. தலைவன். "சேனை மன்னர்கள்" (கந்தபு. சூர. இரண்டா. 47). 3.கடவுள் (பிங்.). 4. கணவன் “மங்கை யுன்றன் மன்னன்" (பிரமோத். 111).

மன்-மன்னவன் = 1. அரசன். "முறைசெய்து காப்பாற்று மன்னவன்" (குறள். 388). 2. விண்ணுலக வேந்தன். "மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்" (சிலப். 5 : 173).

மன்றுதல்' = 1. மிகுதல். 2. உறுதியாதல். 3. தெளிவாதல்.

மன்ற(நி. கா. வி. எ.) = 1. மிக. "மன்ற வவுணர் வருத்திட” (கந்தபு. தேவ. போற். 6). 2. தேற்றமாக. “சென்று நின்றோர்க்குந் தோன்று மன்ற" (புறம். 114). “மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்” (தொல். இடை. 17). 3. தெளிவாக. "நோற்றோர் மன்றநின் பகைவர்" (புறம்.26).

மன்றுதல்2 = தண்டஞ் செய்தல். “அடிகெட மன்றி விடல்" (பழ. 288). இது அறமன்றின் செயல்.

மன்-மான். மானுதல் = ஒத்தல். “மன்னர் சேனையை மானு மன்றே” (கம்பரா. ஆற்று. 14).

மான்-மான = போல (உவமை யுருபு).

66

"வினைபயன் மெய்யுரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம்"

(தொல். உவம. 1)

"அன்ன ஆங்க மான இறப்ப

என்ன வுறழத் தகைய நோக்கொடு

கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம்"

மான் = ஒப்பு (பிங்.).

(தொல். உவம. 12)

மான்-மானம் = 1. ஒப்புமை. “மான மில்லுயர் மணிவண்ணன்" (சீவக. 2747). 2. அளவு. 3. பட்டணம் படியில் அரைப்படிக்குச் சற்று மிகுந்த முகத்தலளவு (ஆம்பூர் வழக்கு). 4. அவ்வளவு கருவி. 5. உரையாணி (திருக்கோ. 335, உரை). 6. கணிப்பு. சூரமானம். 7. அளவைக் கூறு. இருமானம், மும்மானம். 8. மதிப்பு, கண்ணியம். "நன்றேகாண் மான முடையார் மதிப்பு” (நாலடி. 294), 9. பெருமை “புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும்" (தொல். அகத். 41). 10. வலிமை (சூடா.). 11. தன்மதிப்பு. "இளிவரின் வாழாத மான