உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல் (பொருந்தற் கருத்துவேர்)

35

முடையார் (குறள். 970), "மறத்திடை மானமேற் கொண்டு" (பு.வெ. 5 : 6). 12. கற்பு. 13. பூட்கை, வஞ்சினம். “அப்படியே செய்வேனென மானஞ் செய்து' (இராமநா. அயோத். 7). 14. புலவி. “மான மங்கையர் வாட்டமும்" (சீவக. 2382). 15. மானக்கேட் டுணர்ச்சி. “உயிர்நீப்பர் மானம் வரின்." (குறள். 969), "மானந் தலைவருவ செய்பவோ" (நாலடி. 198). 16. வெட்கம். “வஞ்சியை மீட்கிலே னென்னு மானமும்" (கம்பரா. சடாயுவுயிர்நீ. 145). 17. பொருள்ளவு. எ-டு: வருமானம்.

(இடை.) 1. அளவு குறித்துவரும் தொழிற்பெயரீறு. எ-டு: பெறுமானம். 2. நிலை குறித்துவரும் தொழிற்பெயரீறு. எ-டு: கட்டுமானம்.

66

ஒ.நோ: "moon (A.Sax. mona, the moon(masc.); cog. O.Fris. mona, Goth. mena, Ice. mani, Dan. maane, D. maan, OHG. mane, (the Mod.G. mena, moon, is a derivative like E. month). Lith. menu, Gr. mene, Per. ma, Skt. mas, all meaning the moon; from a root ma, to measure; the moon was early adopted as a measure of time, hence the name." - The Imperial Dictionary மான்-மானி. மானித்தல் = (செ.கு.வி.) 1. நாணுதல், மானவுணர்ச்சியால் வெட்குதல். “கூற்றமும் மானித்தது” (பு.வெ. 7 : 25, உரை). 2. செருக்குதல். "நின்னைப் பணியாது மானித்து நின்ற அரசன்" (நீல. 529, உரை).

(செ. குன்றாவி.) 1. அளவிடுதல். 2. மதித்தல், பெருமைப்படுத்து தல். “நாணி மானித்தோமே நாமென்பார்" (காளத். உலா. 243). ஒ.நோ: தீர்மானம்-தீர்மானி.

மானம்-மானி = 1. மதிப்பு அல்லது கண்ணியமுள்ளவ-ன்-ள். 2. செருக்குள்ளவ-ன்-ள். “களிமடி மானி" (நன். 39).

மான்-மா. மாத்தல் = அளத்தல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஆயின், மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர் 1/20 என்னும் கீழ்வா யிலக்கத்தைக் குறித்து வழங்குகின்றது. அதனால், நிலவளவையில் ஒரு வேலியின் 1/20 பாகம் மா எனப்படுகின்றது. "மாநிறை வில்லதும் பன்னாட் காகும்" (புறம். 184) என்பது, இதன் தொன்றுதொட்ட வழக்கை யுணர்த்தும்.

மா-மாத்திரம் = 1. அளவு. “வெளவினன் முயங்கு மாத்திரம்” (கலித். 47 : 22). அவன் எனக்கு எம் மாத்திரம்? (உ.வ.).

வடார்க்காட்டு ஆம்பூரில், ஒரு பொருளின் விலையை வினவும் போது, “அதன் விலை எம்மாத்தம்?" என்பது இன்றும் உலக வழக்கு. எம்மாத்திரம் என்பது எம்மாத்தம் என்று சிதைந்துள்ளது.

மா-மாத்திரம் = 1. அளவு. 2. மட்டும். வால் மாத்திரம் நுழையவில்லை (உ.வ.). 3. தனிமை (சங். அக.).

மட்டும், தனிமை என்னும் இரு பொருட்கும் அடிப்படை அளவு என்னும் பொருளே.