உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

வேர்ச்சொற் கட்டுரைகள்

சென்னைப் பல்கலைக்கழக தமிழகரமுதலி அளவைக் குறிக்கும் மாத்திரம் என்னும் சொல்லை வேறாகப் பிரித்துக் கூறியுள்ளது.

ஒ.நோ: மட்டு = அளவு; மட்டும் = மாத்திரம், தனிமையாய்.

மாத்திரம்-வ. மாத்ர.

=

மாத்திரத்தில் = அளவில், உடனே. அதைக் கேட்ட மாத்திரத்திற் கொடுத்துவிட்டான் (உ. வ.).

=

மாத்திரம்-மாத்திரை 1. அளவு. "மாத்திரை யின்றி நடக்குமேல்" (நாலடி. 242). 2. நொடிப்பொழுதான கால அளவு. “கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை” (தொல். எழுத்து. 6). “சக மூன்றுமொர் மாத்திரை பார்க்கு மெங்கள் கண்ணவனார்" (திருநூற். 25). 3. செய்யுள் உறுப்புகளுள் ஒன்று (எழுத்தொலி யளவு). "மாத்திரை யெழுத்தியல் அசைவகை எனா..நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பெ...வகுத்துரைத் தனரே" (தொல். செய். 1). 4. ஒரு மாத்திரை யொலிக்குங் குற்றெழுத்து (யாழ். அக.). 5. கால விரைவு (பிங்.). 6. மிகச் சுருக்கமான இடம் “அரை மாத்திரையி லடங்குமடி' (தேவா. 970 : 7). 7. அளவாகச் செய்யப்படும் மருந்துக் குளிகை (அரு. நி.). 8. முரல்(இசைச்சுரப்) பகுதி (திவா.). 9. காதணி வகை “செம்பொன் மாத்திரை செரீஇய காதினர்" (பெருங். மகத. 17 : 157).

=

மாத்திரைக்கோல் அளவுகோல். "மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே" (நல்வழி 4). 2. இறும்பர்(சித்தர்) கையிற் கொள்ளும் வரையிட்ட மந்திரக்கோல். "விளங்கு செங்கையின் மாத்திரைக் கோலும்" (திருவாலவா. 13 : 4). 3. மந்திரக்காரன் கைக்கோல் (W.).

மாத்திரைச் சுருக்கம், மாத்திரைப் பெருக்கம் என்பன சொல்லணி வகைகள். சுருக்கம், பெருக்கம் என்பவற்றைச் சுதகம், வருத்தனம் என்னும் வடசொல்லாற் குறிப்பர்.

முத்தமிழிலக்கணமும் இறும்ப(சித்த) மருத்துவமும், ஆரியர் வருகைக்கு முற்பட்டன என்பதை அறிதல் வேண்டும்.

மாத்திரை-வ. மாத்ரா.

பல பொருள்கள் ஒன்றுசேர்வதால், குழம்பலும் குழப்பமும் கலக்கமும் மயக்கமும் உண்டாகும். நீரும் மண்ணும் சேரின் கலங்கல் அல்லது கலுழி யெனப்படுவதும், நீரும் பிற பொருளும் சேர்ந்து திண்ணமாயின் குழம்பு அல்லது குழம்பல் எனப்படுவதும், பகலும் இரவும் மயங்கும்(கலக்கும்) வேளை மசங்கல்(மயங்கல்) எனப்படுவதும் காண்க.

ஒ.நோ: கல-கலகு-கலங்கு-கலக்கு-கலக்கம். ஒரு கவர்த்த வழியைக் காணின் எது வழியென்று தெரியாது கலங்கவும், அறியாதார் பலர் கூடியிருக்கக் காணின் அவருட் காண வேண்டியவர் யாரென்று தெரியாது மயங்கவும் நேரும். இதனால், பொருட்கலக்கம் மனக்கலக்கத்திற்கும் ஏதுவாம்.