உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

37

அமைதியான மனத்தில் கவலை அல்லது அச்சம் கலப்பின் மனக்கலக்கம் உண்டாகும். மனத்தெளிவு முற்றும் நீங்குவதே மயக்கம். அது தீய பொருள் உடம்பிற் கலப்பதாலும் உண்டாகும்.

மல்-மலை. மலைதல் = மயங்குதல். "வேறு வேறு எடுத்துக் காட்டுதல் பற்றி மலையற்க" (சி.போ.பா. 6 : 2, ப. 146).

மலைத்தல் = மயங்குதல். சிறுவன் விடுதிப் பள்ளிக்கு வெளியூர் சென்றபோது, வீட்டை நினைத்து வழியில் மலைத்து மலைத்து நின்றான்.

மல்-மல-மலகு-மலங்கு. மலங்குதல் = 1. நீர் முதலியன குழம்புதல். "மலங்கிவன் றிரைபெயர்ந்து" (தேவா. 130: 9). 2. கண் கலங்குதல். "நெடுங்கண் புகுவன்கண் மலங்க” (சீவக. 1067). 3. கண்ணீர் ததும்புதல். “கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி" (தஞ்சைவா. 243). ஒ.நோ: கலுழி மனங்கலங்குதல். "ஒன்பது வாயிற் குடிலை மலங்க" (திருவாச. 1 : 55).5. கெடுதல். "கதிர்வேன் மலங்க" (சீவக. 1613).

=

கண்ணீர். 4.

மலங்கு-மலக்கு. மலக்குதல் = கலக்குதல். “மலக்கு நாவுடையேற்கு”

(திருவாய். 6 : 4 : 9).

மலக்கு = மயக்கம்.

மலக்கு-மலக்கம் = 1. மாறு. "நவரத்தினங்களாற் கட்டி இடை நிலங்களை...பொற்றகட்டாலே செறிய மலக்கமாகக் கட்டி” (சிலப். 3 : 117, உரை). 2. மனக்கலக்கம். "மலக்கமற்ற நம்மல்லமன்" (பிரபுலிங். வசவண்ணர். 5). 3. துன்பம். “உற்ற மலக்க முண்டா கினாக” (கம்பரா. இராவணன்களங். 18). மலங்கு = பாம்பென்று மயங்குதற் கிடமான விலாங்குமீன்.

மலங்கு-மலாங்கு = விலாங்குமீன். மலங்கு-(மலாங்கு)-விலாங்கு

மல்-மால். மாலுதல் = 1. பொருந்துதல், ஒத்தல். 2. மயங்குதல். “மான்று வேட் டெழுந்த செஞ்செவி யெருவை" (அகம். 3).

மால் = 1. மயக்கம். “புரோம் பழகுடன் மாலங் குடைய மலிவன மறுகி” (குறிஞ்சிப். 96). 2. மயக்கும் ஆசை. “என்பேய் மனமால் கொண்டதே" (திருநூற். 1). 3. ஆசை வகைகளுள் கடுமையான காமம். “மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று" (பரிபா. 10 : 42). 4. இடம் பொருள் தெரியா வண்ணம் கண்ணை மயக்கும் இருட்டு. 5 இருள் நிறமான கருமை. "மால்கடல்" (பெரும்பாண். 487). 6. கருநிறமான திருமால். "நீர்செல நிமிர்ந்த மாஅல் போல" (முல்லைப். 3). 7. கருமுகில். "சிலைமா லுருமு" (தஞ்சை. 164). 8. ரிய முத்திருமேனிக் கொள்கைப்படி காவல் தொழிலால் திருமாலை யொத்தவனான மாலியச்சோழன் (பிங்.).

ஒ.நோ: Gk. melas, black.