உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

வேர்ச்சொற் கட்டுரைகள்

மரு-மருங்கு = 1. (பொருந்தும்) பக்கம். “கனையெரி யுரறிய மருங்கு நோக்கி" (புறம்.23). 2. விலாப்பக்கம். "கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்" (புறம். 3). 3. இடைப்பக்கம், இடை (சூடா.). 4. எல்லை. "மருங்கறி வாரா மலையினும் பெரிதே" (கலித். 48). 5. இடம் (பிங்.). 6. சுற்றம். "அவனின் மருங்குடையார் மாநிலத்தில்." (குறள். 526). 7. குலம். "சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி" (திருமுருகு. 275). 8. செல்வம். "மண்மேல் மருங்குடையவர்க் கல்லால்" (சீவக. 2924). 9. நூல். " தொன்மருங் கறிஞர்” (குறிஞ்சிப். 18).

க. மக்கலு (gg).

=

மருங்கு - மருங்குல் 1. இடைப் பக்கமாகிய இடுப்பு. 2. இடை. "கொம்பரார் மருங்கின் மங்கை கூற" (திருவாச. 5 : 67). 3. வயிறு. "பசிபடு மருங்குலை" (புறம். 260), 4. “யானை. மருங்கு லேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின்" (பெரும்பாண். 352).

மரு = மணமக்கள் பெண்வீட்டில் முதன் முறையாகக் கலந்துண்ணும் விருந்து. மரு மருவு.

=

மருவுதல் சொற்சிதைவு இலக்கண வழக்கொடு பொருந்தி வழங்குதல். மருவு-மரூஉ = 1. நட்பு. "மரூஉச்செய் தியார்மாட்டுத் தங்கு மனத்தாத்” (நாலடி. 246). 2. இலக்கண வழக்கொடு பொருந்தி வழங்குஞ் சொற்சிதைவு.

மருமகன் = 1. மகன்போலப் பொருந்தும் மகள் கணவன். 2. ஒருவனின் உடன்பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன்பிறந்தான் மகன். இவ் விருவரும் மருமகன் நிலைமைக்கு வரக்கூடியவர்.

மருமகள் = 1. மகள்போலப் பொருந்தும் மகன் மனைவி. 2. ஒருவ னின் உடன்பிறந்தாள் மகள் அல்லது ஒருத்தியின் உடன்பிறந்தான் மகள். இவ் விருவரும் மருமகள் நிலைமைக்கு வரக்கூடியவர்.

மருமகன்-மருமான் = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். "மருமான் றன்னை மகவென" (கல்லா. 15). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். "இமவானார் மருமானா ரிவரென்று' (தேவா. 756 : 2). 3. வழித்தோன்றல். "குடபுலங் காவலர் மருமான்" (சிறுபாண்.

47).

மருமகன்-மருகன் = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். "மலைக்கு மருகனைப் பாடிப் பாடி" (திருவாச. 9: 6). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். “வானவரைப் பணிகொண்ட மருகாவோ' (கம்பரா. சூர்ப்பண. 111). 3. 'வழித்தோன்றல். “சேரலர் மருக” (பதிற் 63 : 16).