உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

==

41

மருகன்-மருகு 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். (யாழ். அக.). "மருகென்றே யவமதித்த தக்கன்” (கந்தபு. காமத. 110). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். (யாழ். அக.). மருகன்-மருகி(பெ.பா.)

மரு2 = 1. ஒன்றிலிருந்து இன்னொன்றொடு கலக்கும் மணம். “பூவொடு சேர்ந்த நாரும் மணம்பெறும்" (பழ.). "புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு" (நாலடி. 139) என்பவற்றை நோக்குக.

ஒ.நோ: மணத்தல் = கலத்தல். மணம் = இருவகை நாற்றம்.

வெறுத்தல் = செறிதல். வெறு-வெறி = மணம்.

விரவுதல் = கலத்தல். விர-விரை = மணம்.

"மருவார் கொன்றை" (தேவா. 530 : 1). 2. நறுமணச் செடிவகை (மலை). 3. மருக்கொழுந்து. "மருவுக்கு வாசனைபோல் வந்ததால்" (வெங்கைக்கோ. 112). 4. இடம் (பிங்.).

=

மரு-மருகு தவனம் என்னும் நறுமணச்செடி.

மரு-மருந்து = நோய் தீர்க்கும் பொருள். மருந்தாகும் வேரும் தழையும் பெரும்பாலும் மணம் மிக்கிருப்பதால், நோய் நீக்கும் பொருள் மருந்தெனப்பட்டது. "மருந்தென வேண்டாவாம்" (குறள். 942). 2. பரிகாரம். "மருந்தின்று மன்னவன் சீறில்" (கலித். 89). 3. சாவை நீக்கும் அமுதம். "கடல்கலக்கி மருந்து கைக்கொண்டு" (கல்லா. 41 : 26). 4. பசிநோய் மருந்தான சோறும் நீரும். "இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" (புறம். 70). 5. நீர். 6. இனிமை. "மருந்தோவா நெஞ்சிற்கு" (கலித். 81). 7. வெடிமருந்து. 8. வசிய மருந்து. 9. செய்வினை மருந்து.

66

ம. மருன்னு, தெ. மந்து, க. மர்து. மருத்து-மருத்துவம்-மருத்துவன்.

மருந்து-மருந்தம் = (மருந்தாகப் பயன்படும்) நஞ்சு (W.)

மரு-மருள். மருள்தல் = 1. ஒத்தல். “அணைமரு ளின்றுயில்" (கலித். 14). 2. வியத்தல். "இவ்வே ழுலகு மருள்" (பரிபா. 5 : 35). 3. மயங்குதல். "மதிமருண்டு" (குறள். 1229). 4. வெருவுதல். "சிறார் மன்று மருண்டு நோக்கி" (புறம். 46).

க.மருள்.

மருள் = 1. மயக்கம். "வெருவுறு மருளின்" (சீவக. 2290). 2. திரிபுணர்ச்சி. "மருடீர்ந்த மாசறு காட்சி யவர்." (குறள். 199). 3. பிறப்பு முதல் அறிவின்றி மயங்கியிருக்கும் எச்சப் பிறவி. "மாவும் மருளும்" (புறம். 28). 4. வியப்பு. "மருள் பரந்த வெண்ணிலவு" (திணைமாலை. 96). 5. கள் (யாழ். அக.). 6.