உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

வேர்ச்சொற் கட்டுரைகள்

கோட்டி (பைத்தியம்) (யாழ். அக.). 7. குறிஞ்சி யாழ்த்திறம் எட்டனுள் ஒன்று (பிங்.). 8. மருளிந்தளப் பண். "மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல்" (திவ். நாய்ச். 9 : 8). 9. பேய். (பிங்.). 10. பேய் கொள்ளல். 11. புல்லுரு (W.)

மருளன் = 1. அறிவு மயக்கன். “பட்டப்பகற் பொழுதை யிருளென்ற மருளர்" (தாயு. கருணாகரக். 4). 2. தெய்வமேறி. 3. மதவெறியன்.

மருளாளி = 1. தேவராளன். 2. தெய்வமேறி. 3. பேயாடி. 4. மருள ஓர் உவமவுருபு. “கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய" (தொல். உவ. 15).

66

மருளி = 1. மயக்கம். "மருளிகொண் மடநோக்கம்" (கலித். 14). 2.மதிமயங்கி. “மருளிதான் மயங்கி” (யசோதர. 2 : 42).

மருட்கை = 1. மயக்கம். "ஐயமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கி (தொல். பொருள். 659). 2. எண்வகை மெய்பபாட்டுள் ஒன்றான வியப்பு. "நகையே அழுகை இளிவரல் மருட்கை" (தொல். மெய்ப். 3).

மருட்பா = வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் கலவைப்பா. (தொல். பொருள். 398).

மருண்மா = மதம்படு யானை (திவா.).

மருள்-மிரள். மிரளுதல் = மயங்கி யஞ்சுதல்.

மருட்டு-மிரட்டு. மருட்டி = மிரட்டி.

மிரள்-மெரள். மெரளுதல் = மயங்கி அஞ்சுதல்.

மெரள்-மெருள். மெருளுதல் = மயங்கி அஞ்சுதல், அருளுதல். மெருள் = அச்சம். (நன். 101, மயிலை).

மெருளி = மயங்கியஞ்சி, அச்சங்கொள்ளி.

55

மெருள்-வெருள். வெருளுதல் = 1. மருளுதல். “எனைக் கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32 : 3). 2. அஞ்சுதல். "பெருங்குடி யாக்கம் பீடற வெருளி" (பெருங். மகத. 24 : 84). 3. மாடு குதிரை முதலியன மிரண்டு கலைதல்.

வெருள் = 1. அஞ்சத் தக்கது. "நின்புக ழிகழ்வார் வெருளே (திருவாச. 6 : 17). 2. மனக்கலக்கம் (சூடா.)

வெருளி = 1. மருட்சி. “வெருளி மாடங்கள்" (சீவக. 532), 2. வெருளச் செய்யும் புல்லுரு முதலியன. 3. வறியாரை வெருட்டும் செல்வச் செருக்கு. "வெருளி மாந்தர்” (சீவக. 73).

வெருள்-வெரு = அச்சம். "வெருவந்த செய்தொழுகும் வெங் கோலன்" (குறள். 563), "வெருவரு நோன்றாள்... கரிகால் வளவன்" (பொருந. 147). "வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்" (தொல். பொருள். 111).

வெரு-வ. பிரு (b).

ஒ.நோ: OE. foer, OS. var, OHG fara, G. (ge) fahr, ON. far, E. fear.