உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல் (பொருந்தற் கருத்துவேர்)

43

வெரு-வெருவு. வெருவுதல் = அஞ்சுதல். “யானை வெரூஉம் புலிதாக் குறின்." (குறள். 599)

வெருவு = அச்சம். தெ. வெரப்பு.

வெருவருதல் = 1. அஞ்சுதல். வெருவந்த செய்யாமை (குறள்.). 2. அச்சந்தருதல். “வெருவரு தானைகொடு செருப்பல கடந்து" (பதிற். 70, பதி).

வெருவா -வெருவந்தம் = அச்சம் (W.). வெருவெருத்தல் = அஞ்சுதல். "உயிர் நடுங்கி....வெருவெருத்து நின்றனரால்" (உபதேசகா. சூராதி. 49). வெருவு-வெருகு = அஞ்சத்தக்க காட்டுப் பூனை. “வெருக்கு விடை யன்ன” (புறம். 324).

க. பெர்கு-பெக்கு.

வெருகு-வெருக்கு = அச்சம். வெருக்கு வெருக்கென் றிருக்கிறது.

(2.61.).

=

மரு மறு மறுகு பண்டங்கள் செறிந்த பெருங்கடைத்தெரு. கூலமறுகு = எண்வகைக் கூலங்கள் செறிந்த மறுகு(சிலப். 8 : 73, அடியார். உரை).

மால்-மார்-மாரி = 1. கருமுகில். "மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு.” (குறள். 211). 2. மழை. "மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்” (புறம். 35). 3. மழைக்காலம். "மாரி மலைமுழைஞ்சின் மன்னிக் கிடந்துறங்கும் (திவ். திருப்பா. 23). 4. நீர் (பிங்.)

ம., து. மாரி.

மால்-மழை = 1. கருமை. “மழைதரு கண்டன்" (திருவாச. 6 : 46). 2.நீருண்ட கருமுகில். "மழைதிளைக்கு மாடமாய்" (நாலடி. 361). 3.மழைக்கால். "மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகு" (பெரும்பாண். 363). 4. முகில் பொழியும் நீர். 'கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” (குறள். 55). 5. குளிர்ச்சி. "பெருமழைக் கண்" (குறள். 1239).

மழைத்தல் = 1. கருநிறமாதல். "மழைத்திடு மெய்யுடை மாற்றலர்” (கந்தபு. சூரன்வதை. 132). 2. மழை நிறைந்திருத்தல். "மழைத்த வானமே" (கம்பரா. கார்கால. 2). 3. குளிர்தல். “மழைத்த மந்தமா ருதத்தினால்" (பெரியபு. திருஞான. 150).

மழை- மழ, க. மெளெ.

மல்-மறு = 1. கருப்பு. 2. களங்கம். "மதிமறுச் செய்யோள்" (பரிபா. 2 : 30). 3. குற்றம் (பிங்.). "மறுவில் செய்தி மூவகைக் காலமும்" (தொல். புறத். 20). 4. தீமை. நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர் (உ.வ.). 5.அடையாளம். 6. பாலுண்ணி (W.). 7. தோல் மேலுள்ள கரும்புள்ளி(mole). மச்சம். "மறுவாயிரத்தெட் டணிந்து" (சீவக. 2)

மல் (மால்) = கருமை.