உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஒ.நோ: OE. mal, OHG. meil, Goth. mail, E. mole, spot, blemish, small lump on human skin.

மருமம் = 1. தழுவும் மார்பு. 2. நெஞ்சு. 3. முலை.

மருமம்-மம்மம்-அம்மம் = 1. முலை. 2. முலைப்பால். "அம்ம முண்ணத் துயிலெழாயே" (திவ். பெரியாழ். 2 : 2 : 1). 3. குழந்தையுணவு (குழந்தை வளர்ப்புச் சொல்).

ம. அம்மிஞ்ஞி, க. அம்மி.

ஒ.நோ: கருமம்-கம்மம்-கம் = செய்கை, தொழில், உழவு. இந்.காம்

=

வேலை. பெருமான்-பெம்மான்.

கொல்.

LOLOLOLÒ-L. mamma, E. mamma, milk-secreting organ of female in mammals. E. mammal, one of the animals having mammale(pl.) for nourishment of young.

E. manilla(L. dim. of mamma), nipple of female breast.

மருமம்-வ. மர்மன்.

வ. ம்ரு-மர் = சா (to die). மர்மன் = mortal spot, vulnerable point, any vital member or organ என்பது வடமொழியாளர் கூறும் பொருட்கரணியம். இதன் பொருத்தத்தை அறிஞர் கண்டுகொள்க.

மருளல் = மயங்கல், வியத்தல்.

ஒ.நோ: E. marvel, ME. f. OF. mervveille f. LL. mirabilia, neut. pl. of L. mirablis (mirari, wonder at).

E. mirror (looking-glass) f. ME. f. OF. f. Rom. mirare, look at, f. L. mirari, wonder at.

மேலையர் முதன்முதல் முகக்

கண்ணாடியைக்

கண்டதும் வியந்ததாகத் தெரிகின்றது. அங்ஙனமே ஏனை நாட்டாரும் வியந்திருத்தல்

வேண்டும்.

முல்-முள்-முள்கு. முள்குதல் = முயங்குதல்.

"இளமுலை முகிழ்செய் முள்கிய" (கலித். 125).

முள்- முளி = 1. உடல் மூட்டு. “திகழ் முச்சா ணென்பு முளியற" (தத்துவப். 133). 2. மரக்கணு (யாழ். அக.). 3. கணுக்கால் (W.).

முளி-முழி = எலும்புப் பூட்டு, மூட்டு.

ம.முளி,க.முடி.

முழி-மொழி =1.முழங்கை முழங்கால் முதலியவற்றின் பொருத்து. மொழி பிசகிவிட்டது(உ.வ.). 2. மரஞ்செடி கொடிகளின் கணு. "மொழியு மினியீர்....மதுரக் கழைகாள்" (அழகர்கல. 67). 3. கரும்பின் இருகணுவிற்