உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல் (பொருந்தற் கருத்துவேர்)

45

கிடைப்பட்ட பகுதி. 4. கரும்பின் மொழிபோற் சொற்றொடர்க் குறுப்பான சொல்.

"ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி

இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.

""

(தொல். மொழி. 12)

5. சொற்றொடரான பேச்சு (Articulate speech of, articulate = connected by joints). “மொழிபெயர் தேஎத்த ராயினும்." (குறுந்.11)

முழி-முழம் = கைந்நடுப் பொருத்தினின்று அதன் நுனிவரையுள்ள நீட்டலளவு. “உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம்" (நல்வழி, 28). முழங்கை (முழம் + கை) = நடுப்பொருத்தினின்று நுனிவரைப்பட்ட அல்லது முழு அளவான கை.

முழம் போடுதல் = 1. முழங்கையால் அளத்தல். 2. ஆளின் தன்மையை ஆய்ந்து மதிப்பிடுதல்.

முழங்கால் (முழம்+ கால்) = நடுப்பொருத்தினின்று அடிவரைப்பட்ட அல்லது முழ அளவான கால்.

முழந்தாள் (முழம் + தாள்)-முழந்து = முழங்கால் (சூடா.).

ம.முழம், து.முழம், க. மொழ, தெ. முர.

முள் முழு முழுவு. முழுவுதல் = 1. பொருந்தித் தொடுதல். 2. முத்தமிடுதல். “வந்தென் முலைமுழுவித் தழுவி” (திருக்கோ. 227). 3. தழுவுதல்.

முழுவு-முழுவல் = விடாது தொடர்ந்த அன்பு. “முழுவற் கடல் பெருத்தான்" (தணிகைப்பு. நந்தியு. 6)

முழுவல் - உழுவல் = அன்பு. “பழுத்த வுழுவ லமரர்" (விநாயகபு. 72 : 54). உழுவலன்பு = எழுமையுந் தொடர்ந்த அன்பு. (தொல். களவு. 34, உரை). முழுவு-முழுசு. முழுசுதல் = 1. முட்டுதல். "பிள்ளைகள் முலைக்கீழ் முழுசினவாறே பால் சுரக்கும்." (ஈடு, 5 : 3 : 3). 2. முத்துதல். “அழுந்தத் தழுவாதே முழுசாதே" (திவ். பெருமாள். 9 : 6).

ஒ.நோ: பரவு-பரசு, விரவு-விரசு.

முழுவல்-முழால் = தழுவுகை. "சிறார்முலை முழாலிற் பில்கி" (சீவக.

2541.).

முழுவு-முழவு. முழவுதல் = நெருங்கிப் பழகுதல் (இ.வ) முழவு-முழாவு. முழாவுதல் = நெருங்கிப் பழகுதல் (இ.வ.). முழுத்தல் = திரளுதல், பருத்தல், முழுத்த ஆண்பிள்ளை (உ.வ.).

முழு ஆள்-முழாள் = வளர்ச்சியடைந்த பெரிய ஆள்.