உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

வேர்ச்சொற் கட்டுரைகள்

முழு முழா = 1. திரண்ட முரசு (பிங்.). 2. குடகுழா (சிலப். 141, உரை). முழா-முழவு = 1. முரசு. "முழவின் முழக்கீண்டிய" (சீவக. 2399). 2.குடமுழா (பிங்.). 3. தம்பட்டம் (பிங்.). ம. முழாவு.

முழவுக்கனி = திரண்ட பலாப்பழம் (சங். அக.)

முழவு-முழவம் = 1. பெருமுரசு. "மண்கனை முழவம் விம்ம" (சீவக. 628) 2. குடமுழா. "தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே" (சிலப். 3 : 141) ஒ.நோ: முரசு-முரசம். 'அம்' பெருமைப்பொருட் பின்னொட்டு.

முழா-முழ-முழங்கு. முழங்குதல் = 1. பெரிதொலித்தல். “எழிலி முழங்குந் திசையெல்லாம்" (நாலடி. 392). 2. பலருமறியச் சாற்றுதல். "தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் மூன்றினு முழங்கும்" (இலக். கொத். 7). முழங்கு-முழக்கு-முழக்கம்.

முழா-முழாசு. முழாசுதல் = பெருநாவிட்டு எரிதல் (யாழ்ப்.). முழாசு = பெருந்தீநா (யாழ்ப்.)

முழு = (கு.பெ.எ.) 1. பருத்த. "முழுமுத றொலைந்த கோளி யாலத்து' (புறம். 58). 2. மிகுந்த, மொத்த, நிறைவான, எல்லா. எ-டு: முழுமூடன், முழுத்தொகை, முழுமதி, முழுவுலகாளி (இறைவன்).

முழுக்க(கு.வி.எ.) = முழுதும். "உயிரை முழுக்கச் சுடுதலின்” (சீவக.

1966, உரை).

முழுத்த = முதிர்ச்சிபெற்ற. "முழுத்த வின்பக் கடல்” (திருக்கரு. கலித். அந்)

முழு-முழுது = எல்லாம், எஞ்சாமை. "முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே” (தொல். உரி. 28).

முழுது- முழுசு எல்லாப் பணியாரத்தையும் முழுசு முழுசாய்த் தின்றுவிட்டான் (உ.வ.).

முழுது-முழுந்து = முழுமை. "முழுந்து சுகவடிவாம்" (ஞானவா. சனக.

14).

முழு-முழுமன் = 1. முழுது. 2. அரைக்கும்போது சிதையாது விழும் முழுக் கூலமணி.

முழுமன்-முழுவன்

(2.01.).

=

முழுது. கடன் முழுவனும் தீர்த்துவிட்டான்

முழு முழுமை = 1. பருமை. "துங்கமுழு வுடற்சமணச் சூழ்ந்து மகிழ்வார்” (பெரியபு. திருநாவு. 39). 2. எல்லாம் (பிங்.).

முழுவது முழுதுமுழுதோன்

(திருவாச. 3 : 29).

=

கடவுள். 'முழுதோன் காண்க

99

முழா-மிழா = பருத்த ஆண்மான் (stag = male of red deer or of other large kinds of deer—C.O.D.).