உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

மிழா-மேழம் = செம்மறியாட்டுக் கடா

47

மேழம்-மேடம் = 1. செம்மறியாட்டுக் கடா (பிங்.). 2. மேடவோரை (பிங்.) 3. மேடமதி (சித்திரை). "மேடமாமதி" (கம்பரா. திருவவதா.

110).

மேடம் - வ. மேஷ.

மேழம் -மேழகம் = செம்மறியாட்டுக் கடா. "வெம்பரி மேழக மேற்றி"

(சீவக. 521).

மேழகம்-ஏழகம் = செம்மறியாட்டுக் கடா. ஏழகம்-பிரா. ஏளக.

C: E. elk, large animal of the deer kind found in N. Europe and N. America. ME. elke, OE. elh, eolh.

மேழகம்-மேடகம் = 1. செம்மறியாட்டுக் கடா. 2. மேடவோரை.

மேடகம்-வ.மேடக.

ஏழகம் ஏடகம் ஏடு-யாடு = செம்மறியாடு, வெள்ளாடு, ஆடு."யாடுங் குதிரையும்” (தொல். மரபு.

12).

“ஒன்றிடை யார வுறினுங் குளகு

சென்றுசென் றருந்தல் யாட்டின் சீரே"

என்னும் பழம் பொதுப்பாயிரச் செய்யுள், வெள்ளாட்டைக் குறித்தது. யாடு- ஆடு = 1. ஆட்டுப்பொது. 2. மேடவோரை. “திண்ணிலை மருப்பி னாடுதலை யாக" (நெடுநல். 160).

ம.ஆடு,க.ஆடு, து. ஏடு.

ஒ.நோ: ஏது-யாது, ஏவர்-யாவர்-யார்-ஆர்.

மானும் ஆடும் நெருங்கிய இனமாயிருத்தல் கவனிக்கத்தக்க து. ஆடு என்னுஞ் சொல். இற்றை நிலையில் இருவகை யாட்டிற்கும் பொதுவேனும், முதற்காலத்தில் செம்மறியாட்டையே சிறப்பாகக் குறித்தது. முழா-முடா-மிடா = பெரு மண்பானை. “சோறு செப்பி னாயிரம் மிடா" (சீவக. 692). 2. பானை (பிங்.)

மிடாத்தவளை = பெருந்தவளை (M.M. 90).

-

முழு மொழு மொழுக்கு-மொழுக்கன் = தடித்தவன் (யாழ். அக.). மொழுக்கு-மொழுக்கட்டை = தடித்த-வன்-வள் (இ.வ.)

மொழு-மொழுப்பு = சேலை செறிந்த பைதிரம்(பிரதேசம்).

மொழு-மொழியன் = பெரும் பேன் (யாழ். அக.).

மொழு -மொகு மொக்கு = 1. மரக்கணு (யாழ். அக.). 2. பருமன். மொக்கு-மொக்கன் = தடித்த-வன்-வள்-து (இ.வ.).

மொக்கன்- மொங்கன் = தடித்த-வன்-வள்-து.