உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

வேர்ச்சொற் கட்டுரைகள்

மொங்கன் மொங்கான் = பருத்துக் கனத்த பொருள் (உ.வ.).

மொங்கான் தவளை = பருத்த பச்சைத்தவளை.

மொக்கு மொக்கை 1. பருமன். 2. கூரின்மை. எழுதுகோல் மொக்கையாகி விட்டது (உ.வ.). 3. புணர்ச்சி.

மொக்கை போடுதல் = புணர்தல்.

மொக்கைச்சோளம் = பருத்த அமெரிக்கச் சோளம்.

மொக்கைச் சோளம்-மக்கைச் சோளம்-மக்காச்சோளம்.

மொக்கையாளி-மக்கையாளி-மக்காளி

மிகப் பருத்தவன் (உ.வ.) .

மொக்கை-மொக்கட்டை = மழுக்கமானது (இ.வ.).

=

முல்-முது-முத்து. முத்துதல் =1. சேர்தல். "திருமுத்தாரம்" (சீவக. 504).

2. ஒன்றையொன்று தொடுதல். 3. அன்பிற் கறிகுறியாக இருவர் முகங்கள் அல்லது உதடுகள் பொருந்தித் தொடுதல். “புதல்வர் பூங்கண் முத்தி” (புறம். 41). முத்து-முத்தம். 4. திரளுதல்.

முத்தங்கொள்ளுதல் = 1. தொடுதல், பொருந்துதல். "சிலை முத்தங் கொள்ளுந் திண்டோள்" (சீவக. 2312). 2. புல்லுதல், தழுவுதல். முலைமுத்தங் கொள்ள" (சீவக. 2312). 3. முத்தமிடுதல். "தாய்வாய் முத்தங் கொள்ள" (பெரியபு. கண்ணப்ப. 23).

66

முத்து-முத்தி = முத்தம் (kiss). “மணிவாயில் முத்தி தரவேணும்” (திருப்பு. 183).

66

முத்து = 1. ஆமணக்கு, வேம்பு, புளி முதலியவற்றின் உருண்டு திரண்ட விதை. "முத்திருக்குங் கொம்பசைக்கும்" (தனிப்பா. 1: 3 : 2). 2. நெய்யுள்ள விதை. 3. உருண்டு திரண்ட கிளிஞ்சில் வெண்மணி. "முல்லை முகைமுறுவல் முத்தென்று” (நாலடி. 45). 4. கிளிஞ்சில் முத்துப் போன்ற மாதுளை விதை. 5. வெண்மணி போன்ற கண்ணீர்த் துளி. "பருமுத் துறையும்" (சீவக. 1518). 6. வெண்முத்துப் போன்ற வெள்ளரிசி. 7. ஆட்டக் காய்களாகப் பயன்படும் புளிய முத்து. 8. 7/8 பணவெடை கொண்டதோர் பொன்னிறை. 9. வெண்முத்துப்போன்ற அம்மைக் கொப்புளம். பிள்ளைக்கு உடம்பு முழுதும் முத்துப் போட்டிருக்கிறது (உ.வ.). 10. வெண்முத்துப்போற் சிறந்த பொருள் அல்லது தன்மை. "முதல் விலை முத்துவிலை" (பழ.).

முத்து-முத்தம் = பருமுத்து. "சீர்மிகு முத்தந் தைஇய" (பதிற். 39). 2. பேராமணக்குக் கொட்டை. 3. பச்சைக்கற் குற்றங்களு ளொன்று. (திருவிளை. மாணிக்கம்.67).

'அம்' பெருமைப்பொருட் பின்னொட்டு.

ஒ.நோ: விளக்கு - விளக்கம், மதி-மதியம், நிலை-நிலையம். முத்தம்-வ. முக்த.