உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

49

முத்து-முத்தை = 1. திரட்சி (சூடா.). 2. சோற்றுருண்டை (W.). தெ. முத்த (Mudda). குறுமுத்தம் பழம் = மிதுக்கம் பழம்.

மொலு-மொது. மொதுமொது வெனல் = திரளுதற் குறிப்பு. மொது மொதுவென்று மக்கள் (சனங்கள்) குவிந்தார்கள் (உ.வ.). 2. கொழுத்து வளர்தற் குறிப்பு.

மொதுமொதுவெனல்

மொதுமொதெனல்.

மொது - மொத்து. மொத்துதல் = 1. உரக்க அல்லது வலுக்க அடித்தல். எல்லாருஞ் சேர்ந்து நன்றாய் மொத்திவிட்டார்கள் (உ.வ.). “எதிர்மொத்தி நின்று" (கம்பரா. முதற்போ. 66).

தெ. மொத்து, க. மோது, து. முத்தெ.

மொத்து = 1. வலுத்த அடி. "மோது திரையான் மொத்துண்டு" (சிலப். 7, பாடல் 7). 2. வீங்குதல். அவனுக்கு முகம் மொத்தியிருக்கிறது (உ.வ.) மொத்து-மொத்தி = புடைப்பு (யாழ்ப்).

மொத்து

= 1. தடித்த-வன்-வள்-து. 2. சுறுசுறுப்பில்லாத-வன்-வள்-து.

3. மூடத்தனமுள்ள-வன்-வள்-து.

தெ. மொத்து (moddu), க. மொத்த (modda).

மொத்துப் பிண்டம் = மொத்து 1, 2, 3. மொத்துக் கட்டை =

1, 2, 3.

மொத்து

மொத்தன் = (ஆ.பா.) 1. தடித்தவன். 2. சோம்பேறி. 3. மூடன். மொத்தன்- (பெ.பா.) மொத்தி, மொத்தை.

க. மொத்தி (moddi).

மொத்து-மொத்திகை-மத்திகை = குதிரையை அடிக்கும் சமட்டி. “மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை" (முல்லைப். 59). 2.தடிக்கம்பு, கழி. “வேயின் மத்திகையர்” (அரிசமய. குலசே. 54).

"

Gk. mastix, mastigos = குதிரைச் சமட்டி.

ஒ-அ, சொல்லாக்கத் திரிபு. ஒ.நோ: கொம்பு-கம்பு,ஒட்டு-அட்டு, தொண்டையார்பேட்டை-தண்டையார்பேட்டை.

-

மொத்து மொத்தம் = 1. பருமன்(W.)., திண்ணம். கட்டிற்கால் மொத்தமாயிருத்தல் வேண்டும் (2.01.). எலுமிச்சம்பழத்தோல் மொத்தமாயிருத்தல் கூடாது. 2. கூட்டுத்தொகை. தேர்வு எழுதினவர் எல்லாரும் மொத்தம் எத்தனை பேர்? (உ.வ.). 3. முழுமை. எல்லாக் காய்களையும் மொத்தமாய் விலை பேசி வாங்கிக்கொள் (உ.வ.). வரவு செலவுக் கணக்குப் பார்த்தால் மொத்தத்தில் இழப்பிராது. 4. பொது. எல்லாரையும் மொத்தமாய்த் திட்டிவிட்டான் (உ.வ.). 5. பெரும்பான்மை. மொத்தவிலை வணிகர் (உ.வ.).

மொத்து-மொத்தளம் = (யாழ். அக.) 1. மொத்தம். 2. கூட்டம்.