உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

வேர்ச்சொற் கட்டுரைகள்

மொத்தளம்-மத்தளம் = இருந்தடிக்கும் பெருமதங்கம் (மிருதங்கம்) அல்லது இருதலை முழா.

மொத்து-மொத்தை = 1. பருமன் (யாழ். அக.). 2. உருண்டை, சோற்றுருண்டை.

தெ. முத்த (mudda), க. முத்தெ (mudde)

மொத்தையுரு = நெட்டுரு. மொத்தையுருப் போட்டுத் தேறிவிட்டான்

(2.01.).

மொத்தை-மொச்சை = தமிழ்நாட்டுப் பயற்று வகைகளுள் மிக மொத்தமானது; வீட்டவரைக்கு இனமான காட்டவரை.

மொத்தை-மோத்தை = 1. செம்மறியாட்டுக் கடா. “மோத்தையுந் தகரும் உதரும் அப்பரும்" (தொல். மரபு. 2). மேழவோரை (சூடா. உள். 9). 3. வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ . "நெடலை வக்கா முதலாயின.... தாழம்பூ மோத்தைபோ லிருப்பன” (நற். 211, உரை).

க.மோத்து.

மொத்து-மொந்து-மொந்தன் = பெருவாழை; கதலிக்கு எதிரானது. தெ. பொந்த (bonta).

மொந்து-மொந்தணி = 1. மரத்தின் கணு (யாழ்ப்.). 2. மூடப்பெண் (யாழ்.

அக.).

மொந்தணி-மொந்தணியன் = 1. பருத்தது. 2. உருண்டு திரண்டது. மொத்தை-மொந்தை = 1. பருத்தது. 2. சோற்றுருண்டை. மொத்தையுரு-மொந்தையுரு

மொத்து-மத்து = 1. பருப்பு கீரை முதலியன கடையுங் கருவி. 2. தயிர் கடையுங் கருவி. "ஆயர் மத்தெறி தயிரி னாயினார்' (சீவக. 421). மத்து-வ. மந்த (mantha).

கடைகருவி அடியில் மொத்தமாயிருப்பதனால் மத்தெனப்பட்டது. மத்து-மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். "பாற் சமுத்திரத்தை மத்தித்த திருமால்' (கூர்மபு.).

மத்தி-வ. மத் (math).

மத்தி-மதி. மதித்தல் = 1. கடைதல். "மந்த ரங்கொடு மதித்தநாள்" (சேதுபு. சங்கர. 20). 2. மத்தினாற் கடைந்தாற்போல் கையினால் அல்லது கைவிரலால் அழுத்திக் களிப்பதமாக்கல். குழந்தைக்குச் சோற்றை நன்றாய் மதித்து ஊட்டு (உ.வ.).

மதி-மசி. மசிதல் = களிப்பதமாகக் கடைபடுதல் அல்லது குழைதல். சோறு நன்றாய் வேகாததனால் மசியவில்லை (உ.வ.). 2. பிறர் விருப்பிற்கு இணங்குதல். ஆள் எளிதில் மசிய மாட்டான் (உ.வ.).