உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முல்" (பொருந்தற் கருத்துவேர்)

மசி-வ. மஷ்.

51

மசித்தல் = 1. கடைந்து அல்லது பிசைந்து குழையச் செய்தல். 2. மைக்கட்டியை அல்லது களிம்பை நீரிற் குழைத்து எழுதுமை யுருவாக்குதல். “மசித்து மையை விள்ள வெழுதி” (பதினொ. திருவாலங். மூத். 2).

66

மசி = எழுதுமை. “மசிகலந் தெழுதப் பட்ட" (சூளா. தூது. 83). 2. வண்டி

மசகு.

மசி-வ.மஷி.

மசி-மசகு = வைக்கோற் கரியோடு விளக்கெண்ணெய் கலந்து வண்டி யச்சிற்கிடும் மை.

தெ. மசக (masaka). மசிக்குப்பி

=

மசிக்கூடு.

மசி-மயி-மை = 1. வண்டி மசகு. 2. கண்ணிற்கிடும் கரிய களிம்பு (அஞ்சனம்). "மைப்படிந்த கண்ணாளும்" (தேவா. 1235 : 10). 3. எழுதும் அல்லது ஏட்டிற் பூசும் கரிக்குழம்பு. 4. மந்திர வினையிற் கையாளுங் கரும் பசை. 5. மையின் கருநிறம். "மறவர் மைபடு திண்டோள்" (அகம். 89). "மைம்மீன் புகையினும்" (புறம். 117). 6. இருள். "மைபடு மருங்குல் (புறம். 50). 7. இருண்ட பசுமை. "மையிருங் கானம்” (அகம். 43). 8. கருமுகில். "சேயோன் மேய மைவரை யுலகமும்” (தொல். அகத். 5). 9. கரிய ஆடு (வெள்ளாடு). "மையூன் மொசித்த வொக்கலொடு" (புறம். 96), “வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப" (புறம். 33). 10.கரிய எருமை. "வைகுபுலர் விடியன் மைபுலம் பரப்ப" (அகம். 41). 11. கருமைக்கு இனமான நீலநிற விண் (அரு. நி.). 12. கரிய களங்கம். “மைதீர்ந் தன்று மதியு மன்று" (கலித். 55). 13. அழுக்கு. “மையில் செந்துகிர்" (கலித். 85). 14. குற்றம். "மையி லறிவினர்” (புறம். 22 : 8). 15. கரிசு (பாவம்), தீவினை. “மைதீர்த்தல்” (சினேந். 457), 16. கருமுகில் நீர் (யாழ். அக.) அல்லது நீலக்கடல்நீர்.

மை-மைஞ்சு = கருமுகில், முகில் (நன். 122, மயிலை).

மைஞ்சு-மஞ்சு=1. முகில். “யாக்கை மலையாடு மஞ்சுபோற் றோன்றி” (நாலடி. 28). 2. வெண்முகில். "மஞ்சென நின்றுலவும்" (சீவக. 2853). 3. பனி (பிங்.). 4. மூடுபனி (இ.வ)

ஒ.நோ: ஐ - ஐந்து - அஞ்சு.

மைத்தல் = 1. கருத்தல். “மைத்திருள் கூர்ந்த" (மணிமே. 12 : 85). 2. ஒளி மழுங்குதல். "மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணர்" (சீவக. 2333).

மை-மைப்பு = கருப்பு. "மைப்புறுத்தகண்

(காஞ்சிப்பு. அரிசாப. 2).

ணரம்பைமார்”