உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

52

வேர்ச்சொற் கட்டுரைகள்

மைக்கூடு (கூண்டு) = 1. எழுதும் மைப்புட்டி. 2. கண்மைச் சிமிழ்.

99

முத்து முட்டு. முட்டுதல் = 1. எதிர்ப்படுதல். "வரையா நாளிடை வந்தோன் முட்டினும்" (தொல். களவு. 21). 2. எதிர்த்தல். 3. மோதுதல். 'துள்ளித்தூண் முட்டுமாங் கீழ்" (நாலடி. 64). விலங்குகள் கொம்பால் தாக்குதல், வாயில் நிலையால் தலை தாக்குண்ணுதல். 4. பொருதல். "குலப்பகைஞன் முட்டினான்" (கம்பரா. நட்புக். 50), 5. பொருந்தித்தொடுதல். 6. தாங்குதல். 7. பிடித்தல். “குழலாள்...கையினைக் கையாலவன் முட்டிடலும் (உத்தரரா. திக்குவி. 16). 8. முடிதல். "முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும்" (தொல். செய். 122). 9. நிறைதல். "தோய முட்டிய தோடவிழ் மலர்த்தடம்' (காஞ்சிப்பு. கழுவாய். 79). 10. தடுத்தல். 11. தடைப்படுதல். “வெண்ணெல்லி னரிசி முட்டாது பெறுகுவீர்" (மலைபடு. 564). 12. குன்றுதல். “முட்டா வின்பத்து முடிவுல கெய்தினர்" (சிலப். 15 : 197). 13. இடர்ப்படுதல். 14. தீட்டுப்படுதல். 15. தேடுதல்.

நாடிநாங் கொணருது நளினத் தாளைவான் மூடிய வுலகினை முற்றுமுட் டியென்று”

ம. முட்டுக, க. முட்டு.

(கம்பரா. சம்பாதி.7)

முட்டு = 1. முழங்கை முழங்கால் விரல்கள் ஆகியவற்றின் பொருத்து. 2. குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன (உ.வ.). 3. பற்றுக்கோடு. விலங்குகள் கொம்பால் தாக்குகை. 4. தடை. "முட்டுவயிற் கழறல்." (தொல். மெய்ப். 23). 5. முட்டுப்பாடு. 6. கடத்தலருமை. "முட்டுடை முடுக்கரும்" (சீவக. 1216). 7. குறைவு. "மூவேழ் துறையு முட்டின்று போகிய" (புறம். 166). 8. கண்டுமுட்டு கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் (பெரியபு. திருஞான. 692). 9. மாதவிடாய் (W.).

முட்டடி = அண்மை (W). முட்டுதல் = நெருங்குதல். முட்டத்தட்ட = கிட்டத்தட்ட.

=

முட்டடித்தல் கோலியாட்டில் தோற்றவனுடைய முட்டில் (விரற்பொருத்தில்) வென்றவன் கோலியா லடித்தல்.

முட்டடைப்பான் = வயிற்றை வீங்கச் செய்யும் மாட்டுநோய். (M. cm. D. I. 248).

முட்ட = முடிய, முற்ற. “முட்ட நித்தில நிரைத்த பந்தரின்" (பாரத. கிருட். 103).

முட்டத்தட்டுதல் = 1. மரத்திலுள்ள பழங்களெல்லாவற்றையும் பறித்தல். 2. முழுதும் இல்லாதிருத்தல் (உ.வ.).

முட்ட முடிய = முற்றிலும் முடிவுவரை.

முட்ட முடிபோக = இறுதிவரை.

முட்டு - முட்டம் = மதி முட்டுப்பாடு (மதிக்குறைவு) ஆகிய மடமை.